செய்திகள் :

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? - நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

post image

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

கனிமொழி
கனிமொழி

அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி, " தொகுதி மறுவரையறை குறித்து எங்களுக்கு தெளிவான விளக்கம் தேவை. மசோதாவில் கூறப்படுவதும், அமித்ஷா கூறுவதும் ஒன்றாக இல்லை.

கடைசியாக வெளிவந்த மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதாவின் பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது.

அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா?

மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 850- ஆக உயர்த்தப்பட்டால், பேச கூட வாய்ப்பு கிடைக்காது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும்.

கனிமொழி
கனிமொழி

குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில்கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது. பாஜக சொந்த சதித் திட்டத்தை நாட்டின் மீது சுமத்துவதற்காகவே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது.

பெரும்பான்மை உள்ள கட்சி விருப்பம் போல் தொகுதி மறுவரையறையை செய்து நாட்டினுடைய அரசியல் சூழலையே மாற்ற முடியும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று பேசியிருக்கிறார்.

"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.!"- மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றி... மேலும் பார்க்க

அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்

எல்.முருகனுக்கும் தி.மு.க- வின் இளம் வேட்பாளரான‌ 26 வயதான மருத்துவ பெண்மணி கோகிலாமணிக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. வெற்றியை அடைய இருவரும் தீவிரமாகக் களமாடி வருகின்றனர். எல். முருகன் மத்திய இணை அம... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``முதல்வரே... படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்" - நடிகை குஷ்பு காட்டம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்ப... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``இறுதியில் ஓர் அரசியல் மதிப்பிழப்பு நடவடிக்கையாகவே முடியும்" - எம்.பி சசி தரூர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதான் என மூன்று மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

``நடிகர் மீது மக்களுக்கு இருக்கும் அன்பு அரசியலுக்கானது அல்ல" - விஜய் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ்!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் என்பது வெறும் கட்சிகளுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல, அது மூன்று கொள்கை ரீதியான 'மாடல்களுக்கு' இடையிலான தேர்தல் என நடிகர் பிரக... மேலும் பார்க்க