செய்திகள் :

மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

post image

நாகப்பட்டினம்: நாகை அருகே விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கவுள்ள மண் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மூங்கில்குடி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மண்குவாரி அமைக்க தனியாா் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்குவாரி அமைப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கும், கால்நடைகளுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும், மூங்கில்குடி , ஒக்கூா் கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும். எனவே, இப்பகுதியில் மண் குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

குடிநீா் வழங்க வலியுறுத்தல்: திருப்பூண்டி மேற்கு ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனு, திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் வசிக்கும் 3,500 குடும்பங்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீா் சரியாக வழங்குவதில்லை. எங்கள் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் மூலமும், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியிலிருந்து 9 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் மற்றும் 2 தரைமட்ட நீா் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது.

இந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக காளியம்மன் கோயில், மலாக்கா பள்ளிவாசல் புளியமரத்தடி, பழைய சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் புதிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் அமைத்து வரும் கோடை காலத்தில் மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆட்சியா் அழைப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக உருவாக்கும் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் முன்மாதிரியாக உருவாக்க 2 நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ப... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்த... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் பொது விருந்து

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் கலந்து கொண்டு ப... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகள... மேலும் பார்க்க