செய்திகள் :

`மதிமுக MLA-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்கிறாரா?' - திருமாவளவனின் பதில் என்ன?

post image

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சரின் முடிவை விசிக சார்பில் வரவேற்கிறோம். தோழமைக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் உடனுக்குடன் பரிசீலித்து, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்து வரும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டது குறித்து, அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். நியமிக்கப்பட்ட நபர் முதலமைச்சரின் நம்பிக்கைக்குரியவர் என்பதால் மட்டுமே அந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேலும், இந்த டெல்லி பிரதிநிதி பதவி என்பது மாநில ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்ட பொறுப்பு அல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, முதலமைச்சர் தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான ஒரு தோழருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

இது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் உட்கட்சி விவகாரம் சார்ந்ததாகும். யாரை நியமிக்க வேண்டும் என்கிற முழு அதிகாரமும் முதலமைச்சருக்கு இருக்கிறது. இந்த நியமனத்தால் ஆட்சி நிர்வாகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

வி.சி.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த ஆதவ் அர்ஜுனா தற்போது அமைச்சராக உள்ளார். போதைப்பொருள் ஒழிப்பில் அவருக்குத் தெளிவான பார்வை இருக்கிறது. தமிழ்நாடு அரசு படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி, மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே விசிகவின் தீர்மானம்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் நாடு முழுவதும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதால், மாநில அரசுகள் மட்டுமின்றி, ஒன்றிய அரசும் இணைந்து 'தேசிய மதுவிலக்குக் கொள்கையை' வரையறுத்து அமல்படுத்த வேண்டும்.

திருமாவளவன், வைகோ
திருமாவளவன், வைகோ

வைகோ முன்வைத்த செய்திகள் குறித்து வைகோ-விடமும், தி.மு.க-விடமும்தான் கேட்கவேண்டும். ம.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்லியிருப்பது பற்றிக் கருத்து கூற விரும்பவில்லை. தேர்தல் காலத்திற்கு முன்பாக என்னை வைத்து தி.மு.க கூட்டணியை உடைக்கப் பல சூழ்ச்சிகள் நடந்தன. அதற்கு நான் இணங்கவில்லை.

தேர்தல் முடிந்த பின்னர், இந்த நிலவரத்தில் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னை போன்றவர்களுக்கு இல்லை. அதற்கான வலிமையும் எனக்கு இல்லை. எனவே, கூட்டணி குறித்த விவாதங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் தி.மு.க தலைமைக்குத்தான் உள்ளது'' என்றார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க