செய்திகள் :

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்

post image

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில்’ இணைந்துவிட்டன.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், திமுகக் கூட்டணியிலும் இல்லாமல், தவெகக் கூட்டணியிலும் இல்லாமல் தனி ரூட் எடுத்திருக்கின்றன.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கூடப் போட்டியிட்டு ட்விஸ்ட் கொடுத்திருக்கின்றன இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்.

மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

சத்யபாமா
சத்யபாமா

முதலமைச்சர் இருக்கும்போதே...

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “நேற்று தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் ஆளும்கட்சியில் இருந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்.

அதுவும் அவர் முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே இதைக் கூறியிருக்கிறார்.

108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுக்கும்தான் முதலமைச்சர் விஜய்.

வேட்பாளர் இப்படிக் கூறுவது, எதிர்க்கட்சிகளின் தொகுதிக்கு ஆளும் கட்சி எதுவும் செய்யாது என்பதைக் குறிக்கிறது. இதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும். இப்படியொரு அணுகுமுறை இருந்தால் அது மிக மிகத் தவறு.

தவெகதான் அதிகப் பணம்...

நேற்று நான் மதுராந்தகம் சென்றிருந்தேன். அங்குப் பல கிராமங்களில், ‘நாங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறோம்... எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்’ என்பதைக் கூறி நோட்டீஸ் மட்டுமே தந்தோம்.

சில கிராமங்களில் மக்கள், ‘எல்லாரும் பணம் கொடுக்கிறார்கள்... நீங்கள் நோட்டீஸ் மட்டுமே தருகிறீர்களே’ என்று கேட்டார்கள்.

எந்தக் கட்சி பணம் தருகிறது என்பதைக் கேட்டதற்கு, தவெகதான் இருப்பதிலேயே அதிகப் பணம் தருகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.

உங்களால் அந்தளவுக்குக் கொடுக்க முடியாது. கொஞ்சமாவது கொடுங்கள் என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

மு.வீரபாண்டியன்
மு.வீரபாண்டியன்

வெற்றிடம்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும், “இடைத்தேர்தலில் பண விநியோகம் செய்ய வேண்டிய தேவையில்லை. அதுவே ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.

தவெகவும் செய்கிறது... திமுக செய்கிறது, அதிமுகவும் செய்கிறது. அரசியல் பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால் அங்கு அரசியல் உரையாடல் இல்லை. அந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது.

செங்கொடி பிடித்த கம்யூனிஸ்ட்கள் மட்டுமே வீடு வீடாகச் செல்கிறோம், மக்களோடு உரையாடுகிறோம், அரசியல் பேசுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' - கவனிக்குமா தலைமை?

முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு எதிரே மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் தவெகவினர் தொடர்ந்து அபாயமான முறையில் பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்... மேலும் பார்க்க

கோவை : பெருமாள்முடி, மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு – காரணம் என்ன?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ... மேலும் பார்க்க

’கேப்டன் ஆன்மா பற்றி பேசுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிற்கு அருகதையே கிடையாது’ –பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

கோவை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தே.மு.தி.க, தி.மு.க கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ``தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்" - சிபிஐ வீரபாண்டியன்

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரப... மேலும் பார்க்க

கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிட்டெடில் தலைவராக திமுக ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். இதன் இயக்குநராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், கூடுதல் இ... மேலும் பார்க்க

`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ - முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக

புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது அந்தத் தொகு... மேலும் பார்க்க