செய்திகள் :

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

post image

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான   ஆனந்தகுமார் (29) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னர் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ஆனந்தகுமாருக்கும், மகேஸ்வரிக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதியன்று மாலை இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது.

ஆறுமுகம்
ஆறுமுகம்

அப்போது மகேஸ்வரி மேலும் மது வேண்டும் என கேட்டு தொல்லை கொடுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த ஆனந்தகுமார் மதுவில் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மது அருந்திய மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஆனந்தகுமார் அவரது அப்பா ஆறுமுகம் மற்றும் உறவினர் சுப்பிரமணி ஆகியோரிடம் கூறியுள்ளார். அங்கு வந்த அவர்கள் உதவியுடன் ஆனந்தகுமார் வெள்ளை நிற பையில் மகேஸ்வரியின் உடலை போட்டு, மோட்டார் பைக்கின் முன்புறம் வைத்து அதன் மேல் மீன் வலையை போட்டு மூடி எடுத்து சென்றுள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து மகேஸ்வரியின் உடலை நொய்யல் ஆற்றில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சுப்பிரமணி
சுப்பிரமணி

இந்த நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்றில் பெண் சடலம் கிடப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மகேஸ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தகுமாரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது, மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகேஸ்வரியை கொலை செய்து செய்து ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து ஆனந்தகுமார், ஆறுமுகம், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க