செய்திகள் :

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை டார்கெட் செய்த ஈரான் படை; 'நண்பனாக' உதவிய சீன செயற்கைக்கோள்

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஈரான் கொடுத்த பதிலடி - மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சொத்துகள் மற்றும் ராணுவ தளங்களைத் தாக்கியது ஆகும்.

இந்தத் துல்லிய தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு நாட்டில் இருக்கும் எதிரி நாட்டின் சொத்துகளைத் தாக்க, அது எங்கிருக்கிறது, எங்கே தாக்கினால் சரியாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். அதற்கு அந்தப் பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும்.

சீனா
சீனா

சீனாவின் 'செயற்கைக் கோள்'

இந்தக் கண்காணிப்பிற்காக தான் சீனாவின் செயற்கைக்கோளைப் பயன்படுத்தியுள்ளது ஈரானின் புரட்சிக்கரப் படை.

ஓராண்டிற்கு முன்பு, சீனாவின் 'Earth Eye' நிறுவனத்திடம் இருந்து TEE-01B செயற்கைக்கோளை வாங்கியுள்ளது ஈரானின் புரட்சிக்கரப் படை.

இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, தாங்கள் டெலிவரி கொடுக்கும் செயற்கைக் கோளை பூமியிலேயே தந்துவிடாது. அது ஆர்டர் செய்யப்பட்ட செயற்கைக்கோளை சரியாக ஆர்பிட்டில் நிலைநிறுத்தி தான் டெலிவரி செய்யும்.

இந்தச் செயற்கைக்கோள் தங்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களைக் கண்காணிப்பதுபோல நிலைநிறுத்த ஈரான் கேட்டிருக்கிறது.

அப்படி தான் இந்தச் செயற்கைக்கோள் ஈரானின் கைகளுக்கு சென்றுள்ளது.

ஈரானுக்கு இன்னொரு 'ப்ளஸ்'

இந்த ஆர்டரில் ஈரானிற்கு இன்னொரு ப்ளஸும் கிடைத்துள்ளது. அதாவது சீனாவின் பீஜிங்கை சேர்ந்த செயற்கைக்கோள் சேவை நிறுவனம் Emposat.

இந்த நிறுவனத்திற்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயற்கைக்கோளை கட்டுப்படுத்தி, இயக்கும் நெட்வொர்க் இருந்துள்ளது.

அந்த நெட்வொர்க்குகளுக்கான அனுமதியும் ஈரானுக்குக் கிடைத்துள்ளது.

ஆக, இந்தச் செயற்கைக்கோள் மற்றும் நெட்வொர்க் உதவி மூலம் தான் ஈரான் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதலை நடத்தியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க