செய்திகள் :

மத்திய கிழக்கு போர் எதிரொலி: எரிசக்தித் தட்டுப்பாடைச் சமாளிக்க இந்தியாவின் திட்டம் என்ன?

post image

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எரிசக்தி தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்துவந்த இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

அப்போது, ``இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிடமிருந்தும் எல்.பி.ஜி (LPG) வாங்க அரசு தயாராக இருக்கிறது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிசக்தி விநியோகத்திற்கான ஆதாரங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பரவலான இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய விரும்புகிறோம்.

எங்கள் மக்களின் எரிபொருள் தேவையை உறுதி செய்வதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். எனவே, ரஷ்யாவிடம் எரிவாயு கிடைத்தால், அங்கிருந்தும் வாங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மத்தியில், அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடமிருந்தும் எரிசக்தி உதவி கோரி கோரிக்கைகள் வந்திருக்கின்றன.

2007-ம் ஆண்டு முதல் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் வங்கதேசத்திற்கு இந்தியா டீசல் விநியோகம் செய்து வருகிறது. தற்போதைய நெருக்கடியிலும் அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும்.

இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உதவிகள் மேற்கொள்ளப்படும்.

அமெரிக்கா- ஈரான்
அமெரிக்கா- ஈரான்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சமையல் எரிவாயுவை (LPG) மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

முடிந்தவரை மாற்றுச் சமையல் முறைகளை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எரிவாயுத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாநில அரசுகள் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ளன.

அதேசமயம், எல்.பி.ஜி மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக உணவகங்கள் மற்றும் விடுதிகளில் நிலக்கரி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் என நம்புகிறோம்" என்றார்.

`இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' - திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் தவிக்கிறது திராவிட முன்னேற்... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்ற வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குப் போதிய ஏற்பாடுகள் அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்த... மேலும் பார்க்க

Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

பொதுமக்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணச் சான்றொப்பம் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கும் நோட்டரி வழக்கறிஞர்களின் பணிகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசின் சட்ட அமைச்சகம... மேலும் பார்க்க

'6 சீட்டுக்கு மேல கேக்காதீங்க!' முடிவைச் சொல்லிய திமுக - ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

சி.பி.எம் - தி.மு.க தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. குறைந்த சீட்டுக்கு ஒப்புக்கொள்ள சி.பி.எம் மறுத்த நிலையில் தி.மு.க-வே இறங்கி வர சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்கி... மேலும் பார்க்க

முட்டுகட்டை போட்ட சிபிஎம்; கறார் காட்டிய திமுக - '5' சீட்டுக்கு இறங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட்!

தி.மு.க கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்தன. சுமார் 4 சுற்று பேச்சுவார்த்தைகள் வரை நடந்தும் முடிவு எட்டப்பட்டாமல் இருந்தது. இந்நிலையில் த... மேலும் பார்க்க

நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க