செய்திகள் :

மநீம சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்!

post image

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். மநீம தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை வாழ்த்துவோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின், கமல்ஹாசன்
ஸ்டாலின், கமல்ஹாசன்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்று விளக்கமளித்த கமல்ஹாசன், "இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. கட்சியினுடைய முடிவு.

நீங்கள் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கூறினேன். தமிழ்நாட்டிற்கு நெருக்கடி வந்துள்ளது. நாட்டு நலனுக்கான போராட்டம் தான் இந்தத் தேர்தல். எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை.

தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது. புறக்கணிக்கவும் மாட்டேன். எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளம் அல்ல. முதல்வரும், துணை முதல்வரும் என்னுடன் நட்புணர்வோடு நடந்துகொண்டார்கள். என்னுடன் பயணித்தவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதன்பிறகு கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்து பேசிய ஆர். எஸ். பாரதி, "முதல்வர் ஸ்டாலின் சார்பாக கமல்ஹாசனுக்கு நன்றி. திமுகவின் 2 கோடி தொண்டர்கள் சார்பிலும் கமல்ஹாசனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கலைஞரால் வளர்க்கப்பட்ட பிள்ளை கமல்ஹாசன்" என்று கூறியிருக்கிறார்.

'கூட்டணி போறவங்க நரிக்கூட்டம் மாதிரி... விஜய்தான் சிங்கம்!' - பஞ்ச் அடிக்கும் செங்கோட்டையன்!

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ... மேலும் பார்க்க

'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' - ஆதவ் அர்ஜூனா

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ... மேலும் பார்க்க

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக... மேலும் பார்க்க

`10 தொகுதிகள்' - திமுக - தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்ல... மேலும் பார்க்க

அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளடி? ஏமாற்றப்பட்ட என்.ஜி.பார்த்திபன்! - சோளிங்கர் தொகுதி களேபரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க த... மேலும் பார்க்க

அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது' என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூ... மேலும் பார்க்க