செய்திகள் :

"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புரியவில்லை" - வைகோ

post image

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் விழாவிற்கு வருவார்களா என எதிர்பார்க்கிறேன். அது அவர்கள் முடிவு.

மக்கள் நலனுக்காக கருவேலமரங்களை அகற்றுகிறோம். ஓட்டு கிடைக்காத ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும் தமிழ்நாட்டின் நலனுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வேலையைச் செய்கிறேன். தமிழ்நாட்டு வாழ்வாதார கடமைகளில் எல்லாக் கட்சிகளையும் விட முன்னணியில் நிற்பது ம.தி.மு.க தான்.

27 ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது. அந்தப் பொதுக்குழுவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு பொதுக்குழு தீர்மானங்களை வடித்தெடுக்க உள்ளோம். 

வைகோ
வைகோ

என்னுடைய பயணங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அது தொடர்ந்து கொண்டே இருக்கும். 

விலகி விட்டேன் என்று சொல்பவர்கள், மந்திரி சபையில் சேர்ந்து விட்டேன் என்று சொல்பவர்கள், திமுக-வில் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள் எனக்கு ஒன்றுமே புரியவே இல்லை.

இந்த மாதிரியான நிலைப்பாடு அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது'' என்றார்.

வைகோ
வைகோ

விஜய்யின் சட்டமன்ற பேச்சு மற்றும் செய்கை குறித்த கேள்விக்கு, ''சில மாதங்களில் அவர் கற்று தேர்வார். தெளிவு பெற்றுவிடுவார் என் நான் நம்புகிறேன்,'' என்றார்.

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன்.25) மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் முன்... மேலும் பார்க்க

ராமதாஸ் - அன்புமணி: `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க' - பாச சந்திப்பை புறக்கணித்த ஸ்ரீகாந்தி?

பா.ம.க-வில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத... மேலும் பார்க்க

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' - அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "தமிழகத்தில் பொத... மேலும் பார்க்க

'ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை!' - EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். 2001 முதல் 2026 மார்ச் வரை விரியும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த திமுக அரசின் மீது நிறைய க... மேலும் பார்க்க

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' - சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில், தனியார் துறையின் மிகப்பெரிய தங்கம் சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலையை ஆந்திர முதல்வர் என். சந்திரப... மேலும் பார்க்க