செய்திகள் :

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

post image

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. இதனிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாவதில், தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வந்தன.

அதோடு ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே தனித்தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்தன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலில் விசிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது.

2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டோம். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாகப் பெற்றோம்.

தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிக-வுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிக-வுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து ... மேலும் பார்க்க

தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா?

தற்போது ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி இருக்கின்றன. அதோடு உணவு பொருட்களின் வில... மேலும் பார்க்க

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

"அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று விமர்சித்து திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரிய... மேலும் பார்க்க

`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' - நிர்வாகிகள் கோரிக்கை - ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! - கையெழுத்தானது ஒப்பந்தம்!

தொகுதி பங்கீட்டில் இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அந்தவகையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர்... மேலும் பார்க்க

"அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது" - உதயநிதி தாக்கு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியை... மேலும் பார்க்க