செய்திகள் :

மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் மறுக்கப்பட்டதுடன் அந்த தொகுதி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்தார் மனோ தங்கராஜ். 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வென்ற ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜிக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த முறையும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடக்கும் என எண்ணியிருந்தார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன் தொகுதியும் கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. இது மனோ தங்கராஜ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளும், மனோதங்கராஜின் ஆதரவாளர்களும் கூடினர்.

தி.மு.க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்

பின்னர் அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதில், மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றதில் இருந்து தேசிய கட்சிகளின் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தை தி.மு.க கோட்டையாக மாறி அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கழகத்துக்கு உண்மையாகவும், அரசுக்கு தன் துறை வழியாக நற்பெயரும் உருவாக்கியதோடு, குமரி மாவட்ட தி.மு.க-வை அரண்போல் காத்து, பல ஆயிரம் கோடி திட்டங்கள் மூலம் மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திய அமைச்சர் மனோ தங்கராஜிக்கு பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுபரிசீலனை செய்ய தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வெளியே சாலை ஓரமாக நின்று மனோ தங்கராஜிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். நேற்று காலையில் இருந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்த தி.மு.க-வினர் மதியம் கலைந்து சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் சில நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்குச் சென்று இரவு சுமார் 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மனோ தங்கராஜ் சென்னையில் இருந்தாலும் அவரது ஏற்பாட்டின்படியே ஆதரவாளர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக 9 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 5 ஒன்றிய செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 4 பேர் ஆப்சென்ட் ஆகினர். பத்மநாபபுரம் தொகுதியின் மையப்பகுதியான பத்மநாபபுரம் நகர முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்ளவில்லை.

தி.மு.க போராட்டம்

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், "தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விளவங்கோடு தொகுதியை  கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் விட்டு கொடுக்க மறுத்ததால் வேறு வழியின்றி  பத்மநாபபுரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியது. கட்சி எடுத்த முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். மீண்டும் திராவிட மாடல் அரசு தொடர நமது பணி இருக்க வேண்டும். இருந்தாலும் குமரி மேற்கு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக தி.மு.க-வுக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். இதனை தி.மு.க தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, பத்மநாபபுரம் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கி மனோ தங்கராஜை வேட்பாளராக அறிவிக்க தலைமை பரிசினை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளோம்" என்றார்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க