செய்திகள் :

மன்னார்குடி: ”விவசாயிகளைப் பற்றி கவலையில்லை“ - பாமணி ஆற்றில் நகராட்சி கழிவு நீர்; விவசாயிகள் வேதனை

post image

மன்னார்குடி பாமணி ஆறு காவிரி கிளை ஆறுகளில் ஒன்று. மன்னார்குடியில் இருந்து செல்லும் பாமணி ஆறு பல பகுதிகளைக் கடந்து முத்துப்பேட்டை வரை சென்று கடலில் கலக்கிறது.

பாமணி ஆற்று நீரை நம்பி பல ஆயிரகணக்கான ஏக்கர் விவசாயம் நிலம் பயன்பெறுகிறது. மன்னார்குடி பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் இந்த ஆறு காரணமாக இருக்கிறது.

மன்னார்குடி பாமணி ஆற்றில் விவசாயிகள்
மன்னார்குடி பாமணி ஆற்றில் விவசாயிகள்

பாமணி ஆறு, சேரன்குளம் ஷட்டர்ஸில் இருந்து வெளியேறும் நீர் கருப்பாக இருந்துள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இந்த நீரை பாசனத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம், பாமணி ஆற்றில் கழிவு நீரைத் திறந்து விடுவதை அறிந்து விவசாயிகள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் நகராட்சி நிர்வாகத்தை முறையிட்டுள்ளனர். இந்த விவகாரம் மன்னார்குடியில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் பேசினோம், ''பாமணி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்காமல் தாமதமாகவே திறக்கப்பட்டது.

தற்போது பாமணி ஆற்றில் வரும் தண்ணீர் மூலம் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கழிவு நீர்

இந்நிலையில், மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை நகராட்சி நிர்வாகம் பாமணி ஆற்றில் கலக்கச் செய்துள்ளனர். இதனால் தண்ணீர் கருப்பாக வருகிறது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடையில் வரும் கழிவு நீர் வந்து சேர்கின்ற இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டடப் பணிகள் நடக்கிறது.

இதனால் கழிவு நீர் செல்வதற்கு வாய்ப்பில்லாததால் அதிகாரிகள் கழிவு நீரை பாமணி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் தண்ணீர் கருப்பாக வந்துள்ளது. ஆற்று நீருடன் கழிவு நீரும் கலந்ததால் பயிர்கள் பாதிப்படையும்.

ஆற்றையும், விவசாயிகளையும் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் நகராட்சி நிர்வாகம் இதைச் செய்துள்ளனர். கழிவு நீர் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் பயிர்கள் மட்டுமல்ல மக்களுக்கும் நோய் தொற்று உண்டாகும் அபாயம் ஏற்படும் என நகராட்சி ஆணையர் மற்றும் மன்னார்குடி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். இதற்கு தீர்வு காணவில்லை என்றால் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்தோம்.

பாமணி ஆறு

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நாளை கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆற்றையும், விவசாயத்தையும் காக்க வேண்டும்'' என்றனர்.

இந்நிலையில், பாமணி ஆற்றில் கழிவு நீர் கலப்பத்தை நகராட்சி நிர்வாகம் தடுத்து சுத்தம் செய்கின்ற பணியினையும் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள், இது எங்களுக்கு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

டிம்பர் மரங்களுக்கு இடையில் 70 வகை பழ மரங்கள்; 5.5 ஏக்கரில் உணவுக்காடு: வியக்கவைக்கும் விவசாயி Album

5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓ... மேலும் பார்க்க

ஊட்டி:‌ "நாங்கள் என்ன கிள்ளுக் கீரை‌யா?" - அலட்சிய அதிகாரிகளால் கொந்தளித்த தேயிலை விவசாயிகள்

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் எனக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னை உயர்நீதிம... மேலும் பார்க்க

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; 3-வது நாளாக நீடிப்பு!

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், சமயபுரம் பள்ளிவிடை பாலம் சர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் நேற்று முன்... மேலும் பார்க்க

நெல்லை: கொட்டித் தீர்த்த கனமழை; திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள் - சேதமான நெல் மூட்டைகள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல மாதங்களாக வயலில் உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயி... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க