செய்திகள் :

மயிலாடுதுறை: கிடப்பில் போடப்பட்ட நிதி ஒதுக்கீடும் எட்டு மாதங்கள் கழித்து தொடங்கிய பணியும்!

post image

மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952- இல் தொடக்கப்பள்ளி ஒன்றானது தொடங்கப்பட்டது.

இப்பள்ளியானது 2008இல் மீணடும் மறுசீரமைக்கப்பட்டு, அப்பகுதி மாணக்கர்களின் தொடக்ககல்விக்கு ஆவன செய்து வருகிறது.

ஆனால், இப்பள்ளியில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லை என்பதையும், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியமான மனநிலையை பற்றியும் விகடனில் 03.08.2025 "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல"- பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.

அச்செய்தியானது மயிலாடுதுறை மாவட்ட ஆட்யசிரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒரு வாரத்திற்குள் ஆண்களுக்கு தனிகழிவறை அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால், நிதி ஒதுக்கி எட்டு மாதங்களை கடந்த நிலையிலும் கழிவறை கட்டும் பணியானது தொடங்கப்படாமல், ஒதுக்கிய நிதி கிடப்பிலேயே போடபபட்டது.

இதனைத்தொடர்ந்து நாம் மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) தியாகராஜன் அவர்களிடம் நிதி ஒதுக்கி கழிவறை கட்டும் பணிகள் தொடங்கபடவில்லை என்பதைக் குறித்து கேட்டபொழுது, நம் கண் முன்னரே கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் ஆகியோரை தொடர்புக் கொண்டு விரைவில் கட்டும் பணியினை தொடங்க அறிவுறுத்தி, இரண்டு நாட்களுள் கட்டும் பணிகள் தொடங்கும் எனக் கூறினார்

அவர் கூறிய மறுநாளிலிருந்தே கழிவறை கட்டுவதற்கு அளவு எடுத்து குழி வெட்டுதல் போனற பணிகள் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட பணியினை பாதியிலேயே கிடப்பில் போடாமல், விரைந்து கழிவறையினை கட்டி மாணவர்களின் அசௌகரியமான மனநிலைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர் பொது மக்கள்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க