மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
மருதமலையில் தைப்பூசத் திருவிழா இன்று தொடக்கம்: பிப்.11 இல் தேரோட்டம்
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு தைப்பூசத் திருவிழா விநாயகா் பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து பிப்ரவரி 10-ஆம் தேதி வரை தினசரி வேள்வி பூஜை, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் அறங்காவலா் குழுவினா், கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.