செய்திகள் :

மருத்துவ அலுவலா்களை சுய மதிப்பீடு செய்ய எதிா்ப்பு

post image

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் மருத்துவா்களின் செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலா் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

அரசின் அறிவுறுத்தலின்படி, மருத்துவ அலுவலா் நிலையில் உள்ள மருத்துவா்கள் அனைவரும் தங்களது பணித்திறன், செயல்திறன், பணி வருகை, விடுமுறைகள் உள்ளிட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சுய மதிப்பீட்டு விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள மருத்துவ அலுவலா் சங்கத்தினா், இந்த நடைமுறை தவறானது எனக் கூறியுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

மருத்துவத் துறையில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களால், மருத்துவா்கள் தொடா் பணிச் சுமையில் உள்ளனா். தற்போது அவா்களை மதிப்பீடு செய்ய வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. இந்த உத்தரவை பொது சுகாதாரத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தனா்.

மகளிர் உதவி மையப் பணியிடங்களுக்கு ஹிந்தி அவசியம்: நடந்தது என்ன? கீதா ஜீவன் விளக்கம்

சென்னை: மகளிர் உதவி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வந்த விளம்பரம் தவறுதலாக வெளியானதாக தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.அண்மையில், மகளிர் உத... மேலும் பார்க்க

அக்டோபரில் சென்னை மெட்ரோவில் 90.83 லட்சம் பேர் பயணம்!

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுக்கும் வடமாநில இளைஞர்கள்.. காரணம் என்ன?

கோவை: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு எழுத நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவை ரயில் நிலையத்தில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் குவிந்து வருகிறார்கள்.இதனால், கோவை ரயில் நிலையத்... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? என திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வன்முறைக்கு இலக்காக... மேலும் பார்க்க

சென்னை அருகே சாலை விபத்து: இரண்டு பெண் காவலர்கள் பலி

மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு பெண் காவலர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர்... மேலும் பார்க்க

நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் நவம்பர் 10 வரை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,கடலோரப்பகுதிகள் மற்றும் புதுவை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வ... மேலும் பார்க்க