செய்திகள் :

மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - என்ன சொல்கிறார்?

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். 'சலோ சன்சாத்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் மழை மற்றும் பலத்த போலீஸ் தடுப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். போராட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி மேற்கொண்டும் தாக்குதல் நடத்தியதில் , நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்

இப்போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பா.ஜ.க அரசு நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். மாணவர்களின் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ``நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை வேண்டுமென்றே முடக்குவதற்காக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களை அரசியல் கருவிகளாக வெட்கமின்றிப் பயன்படுத்துகின்றனர். மேலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு விதிகளையும் காங்கிரஸ் மீறியுள்ளது. நாடாளுமன்ற அவையில் நீட் தேர்வு மற்றும் இளைஞர்களின் நியாயமான கவலைகள் குறித்து விவாதிக்க அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்திற்குப் பதிலாக 'அரசியல் நாடகத்தை' தேர்ந்தெடுத்துள்ளது.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

மாணவர்களுக்கான தீர்வுகளைக் காண்பது அவர்களின் நோக்கமல்ல. செய்திகளில் இடம் பெறுவதற்காகப் பிரச்னையை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். விவாதத்திற்கான கதவுகள் திறந்திருந்தபோதிலும் ராகுல் காந்தி வேண்டுமென்றே மோதலை உருவாக்கப் பார்க்கிறார். இந்திய மாணவர்கள் அரசியல் பிரசாரத்திற்கான வெறும் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவதை விட மேலான தகுதி படைத்தவர்கள். கூச்சல்களுக்குப் பதிலாகத் தீர்வுகளையும், முடக்கத்திற்குப் பதிலாகப் பொறுப்புணர்வையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களையும், தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்களையும் வழங்க மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தருமபுரி: எம்எல்ஏ நிகழ்ச்சியில் புறக்கணித்ததால் தற்கொலைக்கு முயன்றாரா தவெக நிர்வாகி?

"குடும்பத்தைக் கவனிக்காமல் கட்சிக்காக உழைத்த என்னை எம்.எல்.ஏ-வுடன் உள்ளவர்கள் புறக்கணித்து வருகிறார்கள்; என் சாவுக்கு அவர்களே காரணம்" என்று த.வெ.க நகரச் செயலாளர் பேசிய ஆடியோ தருமபுரி மாவட்டத்தில் பரபர... மேலும் பார்க்க

சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை; களத்தில் என்ன நடந்தது?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: ``அனைத்தும் நியாயமான கேள்விகள்" - கைதுக்குப் பிறகு ராகுல் காந்தி வீடியோ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை மக்களவைச் சபாநாயகரைச் சந்தித்துப் பே... மேலும் பார்க்க

மாணவர்கள் போரட்டம்: மூக்கில் ரத்தம்; குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! - என்ன நடந்தது?

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்ட... மேலும் பார்க்க

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க