கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி டு அப்செட்டில் நயினார்! | கழுகார் அப்டேட்ஸ்
மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!
2026 - இனிதே தொடங்கியாச்சு மக்களே.
ஃபாலோ செய்கிறோமோ... இல்லையோ... ஆனால், ஒவ்வொரு புத்தாண்டிற்கும் ரிசல்யூஷன் எடுப்பது தற்போது சம்பிரதாயம் ஆகிவிட்டது.
இந்த ஆண்டும் ஏதாவது ரிசல்யூஷன் எடுத்திருப்பீர்கள். இங்கே கூறப்படும் குறைந்தபட்சம் ஒன்றை உங்களது ரிசல்யூஷனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், அதை ஃபாலோ செய்ய வேண்டியது கட்டாயம்.
இவை அனைத்துமே உங்களுடைய நிதி மேம்பாட்டுக்கான ரிசல்யூஷன்கள்...

1. இன்ஷூரன்ஸ்
வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துவிடுங்கள். ஏதோ ஒரு சூழலில், உங்களது குடும்பத்தை அது கட்டாயம் காப்பாற்றும்.
அடுத்தது, குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து வைப்பது சிறந்தது. தனித்தனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியவில்லை என்றாலும், ஃபேமிலி ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் எடுங்கள்.
2. எமர்ஜென்சி ஃபண்ட்
இந்த VUCA உலகில், வேலை தொடங்கி அனைத்துமே நிலையற்றது. அதனால், எதிர்பாராத சூழல்களில் உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் உதவ குறைந்தபட்சம் மூன்று மாத கால வருமானத்தையும், அதிகபட்சம் ஆறு மாத கால வருமானத்தையும் எமர்ஜென்சி ஃபண்டாக சேர்த்து வையுங்கள்.
3. முதலீடு
இந்திய குடும்பங்களுக்கு சேமிப்பு குறித்து சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால், நாம் சேமிப்பில் இருந்து முதலீட்டிற்கு கட்டாயம் ஸ்டெப் அப் செய்ய வேண்டும்.
பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டுமென்பதில்லை. குறைந்தபட்சம் ரூ.500-ல் இருந்து எஸ்.ஐ.பியை தொடங்குங்கள். இது பழக்கமாக மாறும்போது, பின்னர், உங்கள் முதலீடுகளும், முதலீட்டுத் தொகைகளும் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் இந்த மாதத்தில் இருந்து ரூ.1,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த 25 ஆண்டுகளில், ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களுடைய முதலீடு ரூ.12,43,160 ஆக மாறியிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த ஸ்டெப் அப்பை அதிகரித்தால், இன்னமும் உங்களுடைய முதலீட்டுத் தொகை அதிகரிக்கும்.
ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஸ்டெப் அப் செய்வதை உறுதிப்படுத்துங்கள்.

4. செலவு
இன்று பலருக்கும் சேமிக்க முடியாமலும், முதலீடு செய்ய முடியாமல் போவதற்கும் முக்கிய காரணம் செலவுகள். தேவையில்லாத செலவுகளைக் குறையுங்கள். குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு ஒருமுறை 'நோ ஸ்பெண்ட் டே'வை செட் செய்யுங்கள். அன்று நீங்கள் தேவையில்லாத எந்தச் செலவுகளையும் செய்யக்கூடாது.
ஆடம்பரத்தையும், பொழுதுபோக்குகளையும் முற்றிலும் தவிருங்கள் என்று கூறவில்லை. முடிந்தளவு குறையுங்கள். இந்தப் பழக்கமே உங்களை பெருமளவு செலவுகளைக் குறைக்கும் வழிக்கு கூட்டிச் செல்லும்.
5. கடன்
முடிந்த வரை கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக, கிரெடிட் கார்டுகள். கடன் வாங்குவதாக இருந்தாலும், அதை உங்களால் சமாளிக்க முடியுமா என்பதை யோசித்து வாங்குங்கள்.
அந்தக் கடனுக்கான இ.எம்.ஐ உங்கள் மாத வருமானத்தில் 30 சதவிகிதத்தைத் தாண்டவே கூடாது.
இவற்றில் ஏதேனும் ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவரத் தொடங்கினாலே, உங்களுக்கு பாதுகாப்பும், பணமும் தானாக வந்து சேரும்.
ஹேப்பி 2026 மக்களே!




















