செய்திகள் :

மாநிலப் பதவி கொடுக்கும் விஜய்; மாவட்டத்தைக் கேட்கும் விஜயபாஸ்கர் ஸ்கொயர்? - க்ளைமாக்ஸ் என்ன?

post image

தவெக-வில் இணைந்த விஜயபாஸ்கர் ஸ்கொயருக்கு ஒரு மாதம் ஆகியும் கட்சிக்குள் பதவி கொடுக்காமல் வைத்திருந்த விஜய், விரைவில் அவர்களுக்கு முக்கிய பொறுப்பை வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயபாஸ்கர் ஸ்கொயர்
விஜயபாஸ்கர் ஸ்கொயர்

மே 10 ஆம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்ற அன்றிலிருந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் தவெக முகாமுக்கு தாவி வருகின்றன. இதுவரை 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருந்தனர்.

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கும் முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கும் கட்சிக்குள் விஜய் இன்னமும் பதவி கொடுக்கவில்லை.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் பதவி கொடுக்கவிருப்பதாக பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

இதுதொடர்பாக பனையூரின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''அதிமுகவிலிருந்து எங்கள் பக்கமாக வந்தவர்கள் பலருக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அவர்களை கட்சியில் இணைக்கும் போது முக்கியமான உத்தரவாதங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. 'இணையுங்கள் பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்' என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

புதிதாக வந்தவர்களுக்கு உடனடியாக பதவி கொடுத்தால் உற்சாகமாக இருக்கும் தொண்டர்கள் சோர்வடையக்கூடும் என்பதால் தலைமை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், பதவி கேட்டு விஜயபாஸ்கர் ஸ்கொயர் உட்பட அதிமுக கேங் தலைமைக்குத் தூதுவிட்டு கொண்டே இருந்தது.

அவ்வபோது பொதுச்செயலாளர் ஆனந்த்தையும் நேரில் சந்தித்து காதில் கிசுகிசுத்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்தே இவர்களுக்குப் பொறுப்பு கொடுக்க தலைமை முன்வந்திருக்கிறது. விஜபாஸ்கர் ஸ்கொயர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் உட்பட்ட அதிமுக கேங்கில் பலரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், அப்படி மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படுவதை எங்களின் அமைச்சர்களும் மா.செக்கள் சிலரும் விரும்பவில்லை. அதனால் முதற்கட்டமாக மாநில அளவில் 'துணைப் பொதுச்செயலாளர்' லெவலில் ஒரு போஸ்ட்டிங்கைக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், விஜயபாஸ்கர் ஸ்கொயர் மாவட்டச் செயலாளர் போஸ்டிங் எதிர்பார்த்து இன்னமும் தலைமையிடம் முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறது.

இன்றோ அல்லது ஒன்றிரண்டு நாட்களிலோ விஜயபாஸ்கர் ஸ்கொயருக்கான பதவி என்னவென்பது தெரிய வந்துவிடும்' என்றனர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

'கரூர் மதி விஜய்யுடன் உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டவர். அவரிடமிருந்து தொகுதியைப் பிடுங்கி எம்.ஆர் யை மா.செவாக்க விஜய் விரும்பமாட்டார். அதேமாதிரி, புதுக்கோட்டையின் பொறுப்பு அமைச்சர் பர்வேஸ். புதுக்கோட்டையில் விராலிமலை உட்பட 3 தொகுதிகளுக்கு பர்வேஸ்தான் மா.செ.

'மாப்பிள்ளை...மாப்பிள்ளை...' என எவ்வளவு ஐஸ் வைத்தாலும் அவர் தன்னுடைய அதிகாரம் குறைவதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் இடைத்தேர்தலுக்கு முன்பாக விஜயபாஸ்கர் ஸ்கொயரின் மா.செ விருப்பம் நிறைவேற வாய்ப்புக் குறைவு' என்கின்றனர் தவெகவை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள்.

"கமிஷன் வரவில்லை; மணல் கொள்ளை நின்றுவிட்டது என அவர்களுக்குப் பொறுக்கவில்லை"- யாரைச் சொல்கிறார் வைகோ?

சென்னையில் நேற்று ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ, ``பொறுக்கவில்லையே! ஆட்சி போய்விட்டதே, அதிகாரம் போய்விட்டதே, வரவேண... மேலும் பார்க்க

'முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' - மாநகராட்சியில் வெடித்த 'டெண்டர்' விவகாரம்!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்திருந்தது. இந்த கூட்டத்தில் 'லிமிடெட் டெண்டர்' தொடர்பான வாதத்தின் போது துணை மகேஸ் குமார் 'முதல்வருக்கு ஒரு நியாயம்...கவுன்சிலருக்கு ஒரு ... மேலும் பார்க்க

திருவாரூர்: ``200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தவெக அரசு அனுமதித்தது எப்படி?" - சீமான் காட்டம்

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் த... மேலும் பார்க்க

நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை; அனுமதி மறுத்த தவெக அரசு; "அதிர்ச்சியளிக்கிறது"- திருமாவளவன் கண்டனம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் நேற்று (ஜூலை 30) நடைபெறவிருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.நீட் தேர்வுக்கு எதிராகவும், முன்னேறிய வக... மேலும் பார்க்க

மதுரை: 'நீல நிறப் பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி' - புகாருக்கு ஆவினின் விளக்கம் என்ன?

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி,... மேலும் பார்க்க