செய்திகள் :

மாவட்ட நிர்வாகம் டு காலநிலை மாற்றம்! முதல்வர் விஜய் தலைமையில் 2 நாள் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு

post image

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில்,

* சட்டம்-ஒழுங்கு,

* பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,

* பொது சுகாதாரம்,

* போதையில்லா தமிழ்நாடு திட்டம்,

* பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன்,

* அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது,

* முதியோர் நலன்,

* சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது,

* அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,

* புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் தனியாக ஆலோசனை நடத்துகிறார். இதில், 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஜூன் 30 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து IFS அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில்,

* பசுமை தமிழ்நாடு திட்டம்,

* வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு,

* வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது,

* மனித–விலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இதற்கான முன்னேற்பாடாக, ஜூன் 28 காலை 10.30 மணிக்கு, சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து முன்ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க