செய்திகள் :

மின்கட்டணம்: '3.70 லட்சம் புகார்கள் வந்திருக்கா?' - ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் பதில்

post image

"3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தவெக அரசைக் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இந்நிலையில் செய்தியாளரைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தவறாக வந்த தகவலின் அடிப்படையில், மக்களைக் குழப்பும் விதமாக ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் சொல்லும் கணக்கீடுகள் தவறானவை. சமூக வலைத்தளத்தில் அதிகமாக கரண்ட் பில் வந்துள்ளதாகத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வழக்கமான ஆய்வுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த வருடம் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று மடங்கு மேல் பில் வந்து இருக்கிறது. இந்த வருடம் 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்குத்தான் அதிகமாக வந்து இருக்கிறது.

2 லட்சம் பேருக்குக் கடந்த ஆண்டைவிட குறைவாகத்தான் 3 மடங்கு மேல் வந்து இருக்கிறது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறு" என்று கூறியிருக்கிறார்.

சிடிஆர் நிர்மல் குமார்
சிடிஆர் நிர்மல் குமார்

தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, "காவிரி பிரச்னையில் முதல்வர் விஜய் விரைவில் முடிவு எடுப்பார். மேகதாது விவகாரத்தில் அரசு தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிடுவார்" என்று கூறியிருக்கிறார்.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க