செய்திகள் :

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

post image

தியாகிகள் தினம்!

தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்காக நடந்த வீரவணக்க நாள் பேரணியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அங்கே அமைத்திருக்கும் தாளமுத்து - நடராசன் நினைவிடத்திலும், சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையார் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையைச் செலுத்தினர். அதன் பின் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் சிலைகளைத் திறந்துவைத்திருந்தார்.

வீரவணக்க நாள் பேரணி முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள். அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது.

திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்" என்று பதிவு செய்திருந்தார்.

எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பதா?

காலையில் பேரணியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் 74 இடங்களில் மொழிப் போர் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! எங்கள் மொழி, எங்கள் அடையாளம். கீழடி தமிழர் தாய்மடி. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன். தமிழ் வாழ்க" என்ற முழக்கங்களைப் பிரதான கருத்தாக வைத்து கூட்டங்கள் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின், திருவெற்றியூரில் துணை முதல்வர் உதயநிதி, சைதாப்பேட்டையில் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், தாம்பரத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுக்கோட்டையில் கனிமொழி கருணாநிதி என 74 இடங்களிலும் மூத்த நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தலைமை கழக மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் சிலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு வரலாற்றுப்போராட்டம். தமிழ் மண்ணுக்கும், தமிழுக்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. காஞ்சிபுரம் அதிகமாகவே போராட்டங்களைக் கண்டுள்ளது. அதனால் மொழிப்போர் தியாகிகளுக்கு அண்ணா பிறந்த மண்ணில் வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி, நிர்வாக ரீதியிலான அறிவிப்புகள் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கிறது. இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு ஒன்றியம். இங்கே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகப் படுகொலை. சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது.

எதிரிகளை வீழ்த்தவேண்டிய நேரம்!

3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதுவரை 10 முறை தோல்வியைக் கண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இவர்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து திமுகவை வீழ்த்தப்போவதாகக் கூறுகின்றனர்.

திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியாது. பொதுமக்கள், தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய நேரம் இது. தியாகிகளின் தியாகம் வீண் போகாத வகையில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

மக்களுக்கான திட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இந்தி திணிப்பை எந்த வகையிலும் திமுக ஏற்றுக்கொள்ளாது. தொடர்ச்சியாக ஒன்றிய பாஜக அரசு தமிழ் மொழியையும், தமிழர்களையும் புறக்கணித்து வருகிறது. எப்படியாவது ஏதோ ஒருவகையில் இந்தி திணிப்பைத் தமிழகத்தில் நடத்திவிடத் துடிக்கிறது பாஜக அரசு. அதற்காக நமக்கு வழங்கவேண்டிய கல்வி நிதியைக் கூட நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் திமுக அரசு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை.

இந்த இடத்தில் திமுகவைத் தாண்டி வேறெந்த கட்சி இருந்தாலும் பாஜக அடிபணிய வைத்திருக்கும். இதனைத் தமிழ்நாடு மக்களுக்கும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்மொழியைக் காக்கவேண்டிய தேவை குறித்து திமுக தொடர்ந்து பேசும். தமிழுக்காக திமுக செய்தது குறித்து நடந்து முடிந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்களில் எங்கள் கழக உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள். அதேபோல், வரும் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு மக்களிடம் கொண்டு சேர்ப்போம்" என்றார்கள்.

டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!

சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.ககாரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் க... மேலும் பார்க்க

'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03

பாட்டாளி மக்கள் கட்சிகூட்டணி சர்க்கஸ் 3``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 ... மேலும் பார்க்க

"அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது!" - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், " நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டைய... மேலும் பார்க்க

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற... மேலும் பார்க்க