செய்திகள் :

மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை! - என்ன நடந்தது?

post image

பாங்காக் நகரின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், சிமெண்டால் கட்டப்பட்ட பெரிய மீன் தொட்டி இருக்கிறது. இந்த மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் தொடர்ந்து திடீர் திடீரென இறப்பது தொடர்ந்திருக்கிறது. இதற்கிடையில், கடந்த 7-ம் தேதி இரவு 8:30 மணியளவில் சுத்திசாய் என்ற 51-வயது நபர் சைக்கிளில் வந்து, தன் ஆடைகளைக் களைந்து, மீன் தொட்டியில் இறங்கியிருக்கிறார். இதை யதார்த்தமாக கவனித்த வீட்டு உரிமையாளர்கள் அவரை துரத்தியிருக்கின்றனர். இதில் அவர் கீழே விழுந்து காயமடைந்தும் தப்பியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட சுத்திசாய்
கைது செய்யப்பட்ட சுத்திசாய்

இதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணையில் இறங்கியது. மீன் தொட்டி அருகே இருக்கும் சிசிடிவி கேமராவை காவல்துறை ஆய்வு செய்ததில், சுத்திசாய் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வந்து தொட்டியில் நிர்வாணமாக இறங்கி மீன்களை பாலியல் வன்கொடுமை செய்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டது.

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாலியல் தேவைக்காகப் பணம் இல்லாததாலும், துணை இல்லாததாலும் இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக நாயை வன்கொடுமை செய்ததற்காகச் சிறை சென்ற இவர், மற்ற மீன்களை விடக் கோய் மீன்கள் தனக்குக் குறைந்த அளவே வலியைத் தந்ததால் அவற்றை எதேச்சையாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவம் தொடர்பாக விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைதல் மற்றும் பொது இடத்தில் அருவருப்பான முறையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!

கோவை கடந்த 12ம் தேதியன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க