செய்திகள் :

முகம் பார்க்கும் முன்னே ரசிகனான விசித்திரம்! - நெகிழ்ச்சிப் பகிர்வு

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"என் நெஞ்சில் குடியிருக்கும்" என ஆரம்பமே அமர்க்களமாய், ரசிகனாய் ஒருவன் எதிர்பார்ப்பது தன் தலைவன் தனது ரசனையை சரியாய் புரிந்து கொள்வது தானே! அதை என் தளபதி நெஞ்சிலிருந்தே சொல்வார். என் வாழ்வில் தளபதியின் தாக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஆம், தொலைக்காட்சி, திரைப்படம்,திரையரங்கம், நாடகம்,சினிமா,நடிகன், ரசிகன் என எந்த பந்தமும் இல்லாத ஒரு மனிதனாய் வாழ்ந்தவன், ஏனென்றால் தொலைக்காட்சி இல்லா கிராமத்தில் பிறந்து, பொது தொலைக்காட்சியில் கிரிக்கெட் மற்றும் ஒளியும் ஒலியும் பார்த்து வளர்ந்தவன், பிறகு விடுதி (hostel) ல் பயிலும் சூழல் வந்ததால் இவை எதுவுமற்ற உலகம் தான் எமது.

இருப்பினும் விடுதி மாணவர்கள் மத்தியில் நான் கேள்வியுற்ற ஒரே நடிகர் பெயர் விஜய் என்பது மட்டுமே. விஜய் எனும் முகம் கூட சரியாய் பார்த்திராத எனக்கு அவரின் பாடல்கள் மட்டுமே பரிச்சயம். அதற்கு சான்று எனது பள்ளி நோட்டு புத்தகங்களில் மறைந்து இருந்த மதுர, திருப்பாச்சி,சிவகாசி மற்றும் சில பாடல் புத்தகங்கள். அவற்றில் சில பாடல்கள் இன்றும் முழுவதுமாய் எனக்கு மனப்படமாய் உள்ளது.

நான் பொதுவெளியில் கேட்கும் பாடல்கள் விஜய்யுடையதாய் இருக்கும், இல்லையென்றாலும் அவருடையாதாய் நினைத்தே ரசித்திருக்கிறேன். அதுவே வெளி உலக விவரம் தெரிந்த பின்னர் தான் அறிந்து கொண்டேன். நான் மிகவும் குறைந்த படங்களே இதுவரை பார்த்துள்ளேன், அதில் பெரும்பாலும் விஜய் படங்கள் தான் என்பதில் மாற்றமில்லை.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
விஜய்

படம் பார்த்ததால் ரசிகர் ஆன பலரது மத்தியில், ரசிகன் ஆன பின்பு தான் படங்களே பார்க்க ஆரம்பித்தவன் நான். விஜய்யின் நடனம், நடிப்பு, சிரிப்பு என பல திறமைகளில், நான் வியந்து பார்த்தது என்னவோ நகைச்சுவையே, குறிப்பாக வசீகரா படத்தில் அவரது சேட்டைகள் இன்னும் மனதினுள், 

இருப்பினும் "சச்சின்" தான் என்னுள் எப்போதும் முதலில்.., காரணம், அந்த படம் நான் கண்டு மிகவும் ரசித்த படம், பலமுறை பார்த்த படம். நடனமோ, நகைச்சுவையோ, சேட்டையோ, சேவையோ, அழுகையோ அனைத்தும் கலந்த இளமை துள்ளலோடு தளபதியை பழைய மாதிரி, புதிய தோற்றத்தில் காண சச்சின் ஒரு மறு வாய்ப்பு. தெறி முதன் முதலாய் கரூர் கலையரங்கம் திரையரங்கில், 25 நிமிடம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என நினைத்து ரசித்த முதல் திரை அனுபவ படம்.

பிறகு பல படங்களை திரையில் கண்ட எனக்கு, FDFS காட்சி இனி கிடைக்காதே என்ற விரக்தியில் நான் பதிவு செய்த முதல் FDFS படம் ஜனநாயகன். ஆனால் இன்று வரை எனது ஆசை நீண்டு கொண்டே இருக்கிறது. 

கில்லி,போக்கிரி, சிவகாசி, திருப்பாச்சி, துப்பாக்கி, மெர்சல் என வரிசை கட்டிய வெற்றிகள் என்னை தீவிர ரசிகனாக்கியது. மாஸ்டர் தமிழ் திரை உலகம் அவ்வளவு எளிதில் மறந்திடாத படம். அதில் தளபதியின் தோற்றம் மிகவும் ரசிக்கும்படியானது.

போக்கிரி

மெர்சல் படத்தின் அப்பா ரூபத்தில் வரும் தோற்றம் இன்றும் என்றும் மெய்சிலிர்க்க வைப்பவை, ஆழ போறான் தமிழன்,  கேட்கும்போதே சிலிர்க்கும் இப்பாடல் எப்போதும் என் பிளேலிஸ்ட்டில் ஆக்கிரமித்திருக்கும். என் வாழ்வின் பல இடங்களில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்ட, சம்மந்தமே இல்லா ஓர் உறவு அண்ணன் தளபதி. ஏனோ, இன்றல்ல, என்றும் தளபதியின் ரசிகனாய் இருப்பதில் பெருமையே.. எழுத சொன்னால் புத்தகமே எழுதிடுவேன், ஏனோ கட்டுரை மட்டுமே இங்கு தேவையென்பதால் சில கருத்துக்கள் மட்டுமே உங்களோடு இணைந்துள்ளது.

என் தலைவனுக்கு, என் தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  #மாதவன் கவிச்சிதறல்#

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

வெறும் பொழுதுபோக்கு அல்ல... ஒரு வரலாற்று ஆவணம்! - பாரதிராஜாவுக்கு இளம் வரலாற்று மாணவனின் அஞ்சலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'முதல் மரியாதை' காவியத்தை நெஞ்சாரப் போற்றும் எழுத்தாளரின் அஞ்சலி மடல்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வாகை சந்திரசேகர்-க்கு சங்கீத நாடக அகாடமி (Akademi Puraskar) விருது; விரிவான தகவல்கள்...

கலைத்துறையில் ஒரு கலைஞன் தனது வாழ்நாளில் பெறும் மிக உயரிய தேசிய அளவிலான அங்கீகாரமாக சங்கீத நாடக அகாடமி விருது (Sangeet Natak Akademi) கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக நாடக மேடைகளிலும், வெள்ளித்திரையிலும் ... மேலும் பார்க்க

‘புலி’ திரைப்படத் தோல்வியிலிருந்து தொடங்கிய அரசியல் புலிப் பாய்ச்சல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அப்பாக்களின் மௌன ராகம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நீ என் ஸ்பெஷல் சைல்டு! - உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்