செய்திகள் :

`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்

post image

தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக  தவெக தலைவர் விஜய் அவரது பாணியில் நேற்று உரிய பதிலை கொடுத்துவிட்டார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் பயத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது. அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்கிற மன நிலையில் மக்கள் உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு

அந்த மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனர்.

தவெக - தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தற்போதுவரை எந்த கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவியை எல்லாம் ஏற்பதற்கான வாய்ப்பே இல்லை.

விஜய்

எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் அதிகளவு ஆர்ப்பரிக்கிறார்கள். இப்படிப்பட்ட எழுச்சியை நான் பார்த்ததில்லை” என்றார்.

சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10

எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்!முதல் களம் 101989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, சேலம் மாவட்டத்தின் ஒரு சிறிய ஊரிலிருந்து ஒருவர் தேர்தல் களத்தில் குதித்தார். அவர் பெயர் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். பாஜக தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான். அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன.ஹார்முஸ் ஜலசந்தி வழியா... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?

தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து ... மேலும் பார்க்க

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர... மேலும் பார்க்க