செய்திகள் :

‘முதலமைச்சர் விஜய்யை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது’ – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி

post image

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெட்ரோல் விலை உயர்வு எல்லா இடத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரியும். முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இரண்டு மூன்று மாதத்திற்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது விலை உயர்த்துவதை தவிர வேறு  வழி இல்லை. நம்ம ஊர் மக்கள் இந்த விலை உயர்வு பற்றி தெரிந்தவுடன் முடிந்த அளவுக்கு செலவுகளை கட்டுப்படுத்தி கொள்கின்றனர். எவ்வளவு நாட்களுக்குள் யுத்தம் முடியும் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் பிரார்த்தனை செய்கின்றோம். எப்படியாவது முடியட்டும்.

150 ரூபாய் வரை விலை ஏறுமா என்றெல்லாம் பயமுறுத்தாதீர்கள். அதை கட்டுப்படுத்துவதற்குதான் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த விலை உயர்வை ஏற்றாமல் இருந்தால், ஒரு வாரத்திற்குள் ஸ்டாக் இல்லாமல் போய், கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் போகும் நிலை வந்தால் என்ன ஆகும்? அனைத்தையும் இந்த அரசு பேலன்ஸ் செய்து வருகிறது. மாநிலங்களின் வழியாக அடுத்த மாநிலத்திற்கு எண்ணெய் பொருட்களை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து இன்று ஆய்வு நடக்கிறது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

முதல்வர் விஜய் வேலை செய்யட்டும். வேலை செய்து நிரூபிக்கட்டும். அதற்குள் விமர்சிப்பது சரியாக இருக்காது. மக்கள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். நன்றாக பணி செய்யட்டும். தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் துவங்கினால் என்ன பிரச்னை? ரஜினிகாந்த் இதயத்தில் இருப்பதை நாம் தோண்டி பார்க்க முடியாது. அவர் வருவதாக இருந்தால் வரட்டும். எந்த அரசியலுக்கும் வரட்டும். எல்லோரும் வந்து உலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பயன்படட்டும்” என்றார்.

தமிழகத்தில் பா.ஜ.க வளரவில்லையே என்ற கேள்விக்கு, “இந்த உலகத்தில் பா.ஜ.க வளர நேரம் கொடுங்கள். அது வந்துதான் ஆக வேண்டும். இயற்கையாக வளர்வதற்கு நாட்களாகும். கேரளாவில் 1-ல் இருந்து ஜீரோவுக்கு சென்றோம். இப்பொழுது 3 வந்திருக்கிறது. இது 30 ஆக வரும். எங்களுக்கு தெரியும் படிப்படியாக வளர்கிறோம்” என பதிலளித்தார். காக்ரோச் ஜனதா  பார்ட்டி குறித்த கேள்விக்கு, ”இது குறித்து பேசக்கூடிய ஆள் அல்ல நான். காக்ரோச் ஜனதா பார்ட்டி எங்கிருந்து வருகிறது? யாருக்காக வருகிறது? வந்தால் என்ன ஆகும் என பார்க்க வேண்டும். காக்ரோச் ஜனதா பாட்டி வெளிநாட்டு சதியாக இருந்தால், அதை டீல் பண்ணுவதற்கு நம்மிடம் வசதி இருக்கிறது. ஜனங்களுக்கும் அறிவு இருக்கின்றது. தலைவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது” என பதிலளித்தார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க