செய்திகள் :

மும்பை: குடியிருப்பு கட்டட வளாகங்களில் பக்ரீத்திற்கு ஆடுகள் பலியிட தடையா?

post image

மும்பையில் பக்ரீத் பண்டிகையையொட்டி குடியிருப்பு கட்டடங்களில் ஆடுகள் பலியிடுவது வழக்கம். இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்துபவர்கள் மீது மொக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்படி போலீஸாரிடம் பா.ஜ.க அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக முஸ்லிம் சமூகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். மும்பையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மதம் சார்ந்த விலங்குகளை பலியிடுவதற்கு மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கியது.

குடியிருப்பு கட்டடங்களில் ஆடுகள் பலியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் குடியிருப்பு கட்டடங்களில் ஆடுகள் பலியிடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

மீரா ரோட்டில் கைகலப்பு

மும்பையில் முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க இக்கோரிக்கையை விடுத்து இருப்பது, முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி கிரித் சோமையா, மேயர் ரிது தாவ்டே, நிலைக்குழுத் தலைவர் பிரபாகர் ஷிண்டே, மாநகராட்சியின் பா.ஜ.க தலைவர் கணேஷ் கான்கர் மற்றும் மாநகராட்சி தோட்டக் குழுத் தலைவர் ஹெடல் கலா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து மேயர் ரிது தாவ்டே மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் மாநகராட்சி கமிஷனர் அஷ்வினியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர். ஆடுகளை பலியிடுவதை தடுப்பது குடிமக்களின் பண்டிகைகளைக் கொண்டாடும் உரிமையை பறிப்பதாகும் என்று அகில இந்திய ஜமியத்துல் குரேஷின் தேசிய துணைத் தலைவர் இம்ரான் பாபு குரேஷி கூறினார்.

மும்பை காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆசிப் ஃபரூக்கி இது குறித்து கூறுகையில், ''இது போன்ற ஒரு தடையை அமல்படுத்தினால், அது சமூக விரோத சக்திகளை சிக்கலைத் தூண்ட வழிவகுக்கும். ஒவ்வொரு தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் விலங்கு பலியிடப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க மாநகராட்சி மற்றும் காவல்துறையிடம் ஆள்பலம் இல்லை. சமூக வளாகத்தில் ஆடு வெட்டுவதை எந்தச் சங்க உறுப்பினரும் எதிர்க்காவிட்டால், அது வெளியாட்களை எப்படி தொந்தரவு செய்யும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மும்பை புறநகர் பகுதியான மீரா ரோடு பகுதியில் பக்ரீத் பண்டிகைக்காக முஸ்லிம்கள் ஆடுகளை வாங்கிக்கொண்டு வந்து தங்களது குடியிருப்பு வளாகத்தில் தற்காலிக குடில் ஒன்றை அமைத்து அதில் அடைத்திருந்தனர். மொத்தம் 25 ஆடுகள் அதில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்காலிக குடில் அமைக்க குடியிருப்பு கட்டட கமிட்டியில் ஒப்புதல் பெறப்படவில்லை என்று கூறி, சில குடியிருப்புவாசிகள் ஆடுகளை குடியிருப்பு வளாகத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து சில பா.ஜ.க நிர்வாகிகளும், சில குடியிருப்பாளர்களும் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸாரும், மாநகராட்சியினரும் வந்து தற்காலிக குடிலை இடித்தனர். ஆனாலும் ஆடுகள் தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இரவில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

`பள்ளிக்கூடமா... பாலியல் நரகமா?' - பிரான்ஸை உலுக்கும் பள்ளிக் குழந்தைகளின் கதறல்! |என்ன நடக்கிறது?

பிரான்ஸ் நாட்டு அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மூன்று வயதுக் குழந்தைகள் உட்படப் பல சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கும், உடல் ரீதியான வன்முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது பிரான்ஸ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் மே மாத கூட்டம் ரத்து? - பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சியின் மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன?Chennai Mayor Priyaசென்னை மாநகராட்சி 15 மண்டலங்களையும் 200 மாமன்ற உறுப்பினர... மேலும் பார்க்க

வேலூர்: `தவெக மா., செ-வின் அட்ராசிட்டி... அத்துமீறல்' - குற்றச்சாட்டும் விளக்கமும்!

த.வெ.க வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆர்.வேல்முருகன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், `ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர்’ போர்வைக்குள... மேலும் பார்க்க

Arun IPS : 'திமுக விசுவாசி டு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்!' - தவெக தொண்டர்கள் அப்செட்?! | Timeline

காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் ஐ.பி.எஸ்-யை லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய். இந்த நியமனம் தவெக கட்சியினர் மத்தியிலேயே சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது... மேலும் பார்க்க

CBSE: `நடப்பாண்டிலிருந்தே மூன்றாவது மொழி கட்டாயம் என்பது பெரும் அதிர்ச்சி' - அண்ணாமலை எதிர்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப் பாடக் கொள்கையில் திடீர் மாற்றம் செய்திருப்பதற்கு, தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்... மேலும் பார்க்க

‘முதலமைச்சர் விஜய்யை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது’ – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெட்ரோல் விலை உயர்வு எல்லா இடத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரியும். முடிந்த அளவிற்கு... மேலும் பார்க்க