செய்திகள் :

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா: பதவியேற்க தயாராகும் பாஜக - பதற்றத்தில் மேற்கு வங்கம்

post image

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. ஆனால் இத்தேர்தலில் வெறும் 80 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ள மம்தா பானர்ஜி, பா.ஜ.கவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பா.ஜ.கவும், தேர்தல் கமிஷனும் சேர்ந்து சதி செய்து தங்களது கட்சியை தோற்கடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். ஆனால் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க மக்கள் தீர்ப்பை மம்தா பானர்ஜி மதிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜியின் இச்செயலால் மேற்கு வங்கத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது.

மம்தா பானர்ஜி

இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்யும் படி மாநில நிர்வாகத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கிடையே வரும் 9ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான வரும் 9ம் தேதி மத்திய கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா நடக்க இருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மைதானத்தில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் போன்ற தலைவர்கள் உரையாற்றி இருக்கின்றனர். மற்றொருபுறம் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. புதிய முதல்வர் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை மேற்கு வங்கத்திற்கு வர இருக்கிறார்.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க

`தவெக-வுக்கு அதிமுக ஆதரவா..?' - நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு கே.பி.முனுசாமி சொன்ன முக்கிய தகவல்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளிடம் பேசி வருகிறது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்... மேலும் பார்க்க