செய்திகள் :

முதல்வர் விஜய் உரை: "'தந்தை - மகன்' கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை" - நயினார் நாகேந்திரன்

post image

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல திரு. விஜய் அவர்களே! உங்கள் அடுக்கடுக்கான வசனங்களைக் கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல.

உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன. உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துகின்றனர், உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.

சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கெனப் புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்தத் தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே, “தந்தை - மகன்” கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை" என்று விமர்சித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

By-Election: மதராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதனால் சில தொகுதிகள்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் உரை: "வதந்திகளையும், WhatsApp பொய்களையும் கலந்து ஒரு பிரதி" - கனிமொழி காட்டம்

காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்த... மேலும் பார்க்க

'மெதுவா படிக்கிறது தப்பா?' - குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தில் பள்ளி நிர்வாகம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள இடைக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு குழந்தை மிகவும் பொறுமையாகப் படிப்பதால் அந்தக் குழந்தையின் படிப்பை நிறுத்த ஒரு பள்ளி நிர்வாக... மேலும் பார்க்க

`ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து’ - வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி

வேலூர் அருகேயுள்ள அரியூர் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி ரூபன்குமார் - தீபிகா. இவர்களின் மகள் ரூபிகா தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி க... மேலும் பார்க்க

"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லை.!" - வருந்தும் செல்வப்பெருந்தகை | பேட்டி

'தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்' என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர்.ஆனால், அதன்பிறகும்... மேலும் பார்க்க

"திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க விஜய் தயாரா?" - ஆர்.எஸ்.பாரதி சவால்

சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியிருந்தார். இ... மேலும் பார்க்க