செய்திகள் :

`முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை?' - அமைச்சர் ராஜ் மோகன் அளித்த பதில் இதுதான்!

post image

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``இந்தியாவின் பிரதமர் மோடியும், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யும் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? ஏன் செய்தியாளர்களைப் புறக்கணிக்கிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதிலளித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் போன்றோர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறோம். என்னைப் போன்ற எளியோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நாங்களும் முதல்வரும் வேறு வேறல்ல.

விஜய், மோடி
விஜய், மோடி

இது ஜனநாயக பூர்வமான அரசு மற்றும் கட்சி என்பதற்கு இதுவே சான்றாகும். முதல்வர் தனது சமூக வலைதளங்கள் வாயிலாக நன்கு பகுப்பாய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் மூலம் தன் கருத்தை தெளிவுபடுத்தி வருகிறார்" என்றார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள், `தேசிய அளவிலான ஞானேஷ் குமார் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏன்? புதிய தலைமைச் செயலகம் குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் இதுவரை முதல்வர் அது குறித்து எதுவும் கூறவில்லையே' எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ``இது மக்கள் மன்றமே தவிர சட்டமன்றம் அல்ல. இங்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனடியாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அதிகாரிகள் முதற்கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களிடமும் கருத்துகளைக் கேட்கின்றனர். இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும். முதல்வர் அனைவரையும் அரவணைத்து, அனைவருக்கும் ஏற்ற நல்லதொரு முடிவையே எடுப்பார்.

சென்னையில் சிறுமிக்கு நடந்த பாலியல் அநீதி மிகவும் கண்டனத்திற்குரியது. அதேவேளையில், சிங்கப்பெண் படை தொடங்கப்பட்ட பிறகு பல்வேறு நன்மைகள் நடந்துள்ளன. இந்த சிங்கப்பெண் படையும் முதற்கட்டத்திலிருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் போது, சமூகத்தில் மிகப்பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சத்யபாமா
சத்யபாமா

பொதுவாழ்வில் 25 ஆண்டுகளைக் கடந்து சேவை செய்து வரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் தவெக-வின் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதற்கு முதல்வருக்கு நன்றி. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற்றும் வதந்திகளை ஊடகங்கள் தீர விசாரிக்காமல் செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என்றும், உருவக்கேலி செய்தும், வீடியோக்களை வெட்டி ஒட்டியும் திட்டமிட்டு கருத்து வன்முறை திணிக்கப்படுகிறது. அதேபோல, கோயில்களில் தமிழ் எழுத்துகள் நீக்கப்பட்டதாகப் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும், கரூர் அரசு மருத்துவமனையில் முந்தைய ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட இந்தி எழுத்துகள் கொண்ட மருந்துப் பைகளைத் தற்போதைய நிகழ்வு போலப் பரப்பியதும் பொய்ப் பிரசாரங்களாகும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஜெம் வீரமணி: `காவலில் வைத்து விசாரியுங்கள்..!'- போக்சோ வழக்கில் ஆஜர்படுத்திய போலீஸ்; கோர்ட் உத்தரவு!

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவல் விசாரணையில் இருக்கும் அவர்மீது, மற்றொரு புகாரின் அடிப்படை... மேலும் பார்க்க

Virat Kohli: ``ஆசிரமத்தைப் பிரபலப்படுத்த ரூ5 கோடி பெற்றேனா?" - விராட் கோலி தரப்பு விளக்கம்!

உத்தரப்பிரதேச மாநிலம், விருந்தாவனத்தில் உள்ளது பிரேமானந்த் மகாராஜா எனும் சாமியாரின் ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கு 2023-ம் ஆண்டு கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சென்றிருந்... மேலும் பார்க்க

'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தனுஷ்இது ச... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது; சூடுபிடிக்கும் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.இந்நிலையில்,... மேலும் பார்க்க

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா... மேலும் பார்க்க

EVM குற்றச்சாட்டு: ``பிரகாஷ் ராஜ் திரையில் என்ன கேரக்டரோ... நிஜத்திலும் அப்படியே!" - நயினார் சாடல்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர் சந்திப்பில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர... மேலும் பார்க்க