செய்திகள் :

``முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்.!" - வைகோ நம்பிக்கை!

post image

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு குறித்து மதிமுக தலைவர் வைகோ நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ``மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை ஒன்றும் ஆச்சரியகரமானது அல்ல. இருப்பினும், அவரது போக்கும் நடவடிக்கைகளும் அனைத்து மாநிலங்களின் தனித்தன்மையையும் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

அமித் ஷா

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், மாநில உரிமைகளைச் சாடியும், இந்தி ஆதிக்கத்தையும் இந்துத்துவா கொள்கையையும் நிலைநாட்டத் துடிக்கும் அமித் ஷா மீது எங்களுக்கு எந்தவித நம்பிக்கையோ அல்லது உடன்பாடோ கிடையாது. மேகதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு முழங்கி வரும் சூழலில், அம்மாநிலத்தில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட அநியாயம் நடந்துள்ளது.

தமிழர்களைக் கொடூரமாகக் கொன்றவர்களை உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மற்ற மாநில தலைவர்கள் தலையிடத் தேவையில்லை எனக் கர்நாடக முதல்வர் கூறியிருப்பது அவரது அகந்தையையும் ஆணவத்தையும் காட்டுகிறது. இது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு முதல்வர் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், மேகதாட்டு விவகாரம் குறித்துக் கண்டிப்பாக வலியுறுத்துவார்.

முதல்வர் விஜய்

இதில் தமிழ்நாடு அரசு தனது உரிமையை இம்மியளவும் விட்டுக் கொடுக்காது என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. இதே நேரத்தில் உள்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் இருக்கும் சூழலில், இருவரிடமும் ஒரே நேரத்தில் பேச முடியாது. முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் இலக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தனது பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டிச் செல்ல விரும்பவும் மாட்டார், அதற்கான முயற்சியிலும் ஈடுபட மாட்டார்." என்றார்.

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் திட்டத்தில் இத்திட்டம் அறிமுகம்... மேலும் பார்க்க

4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு; நீதிபதி திவாகரிடமிருந்து திரும்ப பெறப்பட்ட 97 வழக்குகள்

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்நகரில் நீதிபதியாகப் பணியாற்றிய ரவிக்குமார் திவாகர் கடந்த 4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் 10 வழக்குகளில் 22 பேருக்க... மேலும் பார்க்க

TN Assembly: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை; அமைச்சர் தாக்கல் | Live Updates

'சட்டமன்றம் இன்று...'கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத் துறையின் மானியக் கோரிக்கையை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று அவையில் தாக்கல் செய்கிறார். மேலும் பார்க்க

``சர்கார் பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது!'' - அமைச்சர் ஆனந்த் கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த் சர்கார் பட சமயத்தில் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்திர... மேலும் பார்க்க

'சீட் கேட்ட பிரபல சினிமா இயக்குநர்; உடனே மறுத்த முதல்வர் விஜய்!' - அமைச்சர் ஆனந்த் பகிரும் ரகசியம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தேர்தலின் போது திரைமறைவில் நடந்த சில விஷயங்களையும் பேசியிருந்தா... மேலும் பார்க்க