செய்திகள் :

முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

post image

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் என்பவர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, `மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று சுட்டிக்காட்டினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

மேலும், `7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகித்த ஒரு மூத்த அரசியல்வாதி, ஏன் இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளைப் பேச வேண்டும்' எனக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், அனிதா ராதாகிருஷ்ணன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவிவந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.... மேலும் பார்க்க

`இயக்கம் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென..'- அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " அனைத்திந்திய அண்ணா தி... மேலும் பார்க்க

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

`என் கார்ல வருகிறேன்' - அனிதா ராதாகிருஷ்ணன்; `போலீஸ் வாகனத்துல ஏறுங்க.!' - கைதின் போது நடந்தது என்ன?

திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா... மேலும் பார்க்க

இப்போதே முன்னிறுத்தப்படும் ராகுல்: காங்கிரஸின் `இருபக்க கூர் கத்தி' கை கொடுக்குமா? கையை கிழிக்குமா?

'ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர்'2029 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தேசிய அரசியலில் அதற்கான காய்நகர்த்தல்கள் தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, காங்கிரஸ்... மேலும் பார்க்க

’தில்லுமுல்லு அம்பலம்; எந்த எல்லைக்கும் செல்ல திமுக தலைமை தயாராகிவிட்டது!’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார. அவர் இது குறித்து பேசுகையில், “ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த ஆதர... மேலும் பார்க்க