செய்திகள் :

``முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" - ஆர்.எஸ்.பாரதி கேள்வி

post image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தஞ்சாவூர் மற்றும் தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க தலைவர் மீதும் பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால், ஆளுங்கட்சி அல்லது பிற கட்சிப் பிரமுகர்கள் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதலமைச்சருடன் தலைமறைவு குற்றவாளி ஒருவர் ஒரே வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அவர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? அதேபோல், பள்ளிக் குழந்தைகளை அமர வைத்துக்கொண்டு பெண்களை இழிவாகப் பேசிய விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

மேலும், தாராபுரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது பெண் காவலர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபரை உடனடியாகக் கைது செய்த காவல்துறை, ஒரு மணி நேரத்திற்குள் விடுவித்துள்ளது.

யாருடைய தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதற்கு தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக பிற கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வரும் த.வெ.க கட்சியினரால், தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது சாதாரணத் தொண்டனையோ கூடத் தொட்டுப் பார்க்க முடியவில்லை. கட்சி உறுப்பினர்களை இழுக்க முடியாத விரக்தியில், தி.மு.க அவைத்தலைவர் வீட்டு மரத்தில் இருந்த முருங்கைக்காயை மட்டுமே அவர்களால் பறிக்க முடிந்துள்ளது.

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

வழக்குகளைக் கண்டு அஞ்சும் கட்சி தி.மு.க அல்ல. பல்வேறு பெரிய வழக்குகளைச் சந்தித்தே நாங்கள் வளர்ந்துள்ளோம். ஆனால், சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறையின் இந்த ஒருபக்கச் சார்பான செயல்பாட்டை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக எம்.பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றியதால், தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபமடைந்திருந்தார். அமைச்சர் ரமேஷ் அவரைச் சமா... மேலும் பார்க்க

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக - அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `50 ஆண்டு போராட்டம்’ - கோயிலின் பூட்டை உடைத்து தலித் மக்களை வழிபட வைத்த பெண் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின் நிலத்தில் பழமையான ஸ்ரீ கலியுக சீனுவாசப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலுக்கு, தலித் மக்... மேலும் பார்க்க

பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப... மேலும் பார்க்க

திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக... மேலும் பார்க்க