செய்திகள் :

`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி' - சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

post image

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏமாற்றி இருக்கின்றனர். இப்போது புதிதாக தமிழக முதல்வர் விஜய் பெயரைப் பயன்படுத்தி மத்திய பிரதேசத்தில் ஒரு கும்பல் பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் செயல்படும் விஜய் பவுண்டேஷன் மூலம் தொழில் தொடங்க கடன் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வந்தது.

அதோடு சைபர் கிரிமினல்கள் போன் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு விஜய் பவுண்டேஷன் மூலம் நிதியுதவி, கடன், கல்விக்கடன், ஸ்டார்ட் அப் தொழில் கடன், மானியம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அதில் மயங்கும் நபர்களிடம் ஒரு பதிவு இணைப்பை அனுப்பி அதனை பூர்த்தி செய்யச் சொல்லி இருக்கின்றனர்.

பதிவு செய்து அனுப்பியவுடன் பதிவுக்கட்டணம், சரிபார்ப்பு கட்டணம் என பல்வேறு வகையாக கட்டணங்களைக் கூறி அதனை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யச் சொல்வது வழக்கம்.

அதனை நம்பி இந்தூரைச் சேர்ந்த ஏராளமானோர், சைபர் கிரிமினல்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்கள் அதிகபட்சம் தலா ரூ.50 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். பணம் கட்டியவர்களுக்கு எந்த வித நிதியுதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் இந்தூர் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் கூறுகையில், ''மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, நன்கு அறியப்பட்ட ஒரு பொதுப் பிரமுகரின் பெயரை இணையக் குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். இம்மோசடிக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய அலைபேசி எண்கள், பணப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், இந்த மோசடியில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்றார்.

முதலமைச்சர் விஜய் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் மற்றும் சந்தேகத்திற்குரிய போலி அறக்கட்டளை தொடர்பான விவரங்களை, இந்தூர் குற்றப்பிரிவு போலீஸார், தமிழ்நாடு போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க