செய்திகள் :

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்: 'தனி விமானம், ரோடு ஷோ, திறப்பு விழா...' - விழா ஏற்பாடுகள் தீவிரம்

post image

தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தருவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.  

திருச்சி சரக ஐ.ஜி. நேரில் ஆய்வு:

முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று
( அக்டோபர்-29) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்கள், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேட் தளம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ரவீந்திரகுமார் குப்தா, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோருடன் இணைந்து ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினார்.

புதிய பஸ் நிலையம் - உள்விளையாட்டு அரங்கம் திறப்பு:

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட புதிய உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் உரை நிகழ்த்துகிறார்.

தனி விமானம் மூலம் பயணம்:

விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வரும் 2-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகை தருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகவோ அல்லது சாலை மார்க்கமாகவோ புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரமாண்ட ‘ரோடு ஷோ’:

புதுக்கோட்டை வருகை தரும் முதலமைச்சருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக முதலமைச்சர் விஜய் காரில் சென்று, பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் பிரமாண்ட 'ரோடு ஷோ' நடத்தத் தவெக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.

விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முதலமைச்சரின் இந்தப் புதுக்கோட்டை வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் தவெக தரப்பில் பெரும் உற்சாகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

``என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" - அமைச்சர் கீர்த்தனா

சிவகாசியில் நடைபெற்ற ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பெண்கள் தங... மேலும் பார்க்க

நடிகர் தனுஷ் அரசியல் வருகை? "நாமலே ஏன் படம் வரைஞ்சி கண்ணு மீசை எல்லாம் வைக்கணும்" - கருணாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா பசும்பொன்னில் யாக வேள்வியுடன் தொடங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்ச... மேலும் பார்க்க

`ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு?' - உதயநிதி கேள்வி!

ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' - பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அர... மேலும் பார்க்க

`மின்வெட்டால் மீனாட்சி அம்மனிடம் நிம்மதியாக பிரார்த்தனைகூட செய்ய முடியாது'- எடப்பாடி பழனிசாமி வேதனை

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிட... மேலும் பார்க்க

``பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை, என்ன வழக... மேலும் பார்க்க