செய்திகள் :

மும்பை: கடற்கரையோர வீடுகளில் ஆர்வம் - கோடிகளை முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்!

post image

மும்பை பாந்த்ரா பகுதியில் பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பாந்த்ரா கடற்கரை பகுதியான பேண்ட்ஸ்டாண்ட், பாலி ஹில், ஒர்லி, ஜூகு மற்றும் வெர்சோவா பகுதிகளில் பாலிவுட் பிரபலங்கள் கோடிகளை செலவு செய்து சொத்துகளை வாங்கி குவித்து வருகின்றனர். அரபிக்கடலின் தடையற்ற காட்சிகளையும், அதன் காற்றையும் அனுபவிக்கும் நோக்கில் அவர்கள் இந்த அளவுக்கு கோடிகளை செலவு செய்து வருகின்றனர். பாந்த்ரா மேற்கு பகுதி பாலிவுட் தொழில்துறையினரின் மிகவும் விருப்பமான இடமாக உள்ளது. அங்குள்ள பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்ட்டர் ரோடு, கடல் பகுதியை கண்டுகளிக்கும் வகையில் இருக்கின்றன.

அதே நேரத்தில் பாலி ஹில் பசுமையான மற்றும் மிகவும் சுதந்திரமான மற்றும் ஏற்கெனவே பிரபலங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. நடிகர் ஷாருக் கான் ஆரம்பத்தில் இருந்தே கடற்கரையோரம் வசித்து வருகிறார். அவரது மன்னத் பங்களா கடற்கரையோரம் இருக்கிறது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே

அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்தாலே கடல்தான் இருக்கிறது. அதிகமானோர் கடற்கரைக்கு வருவது போல் வந்து நடிகர் ஷாருக் கான் வீட்டையும் பார்த்து செல்வது வழக்கம்.

ஷாருக் கான் வீட்டிற்கு அருகில் நடிகர் ரன்வீர் சிங் அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகளை ஒன்றாக இணைத்த வீட்டை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.119 கோடியாகும். இந்த வீடு 16 முதல் 19 வது தளங்கள் முழுவதும் பரவியுள்ளது. இது 11,266 சதுர அடி கார்பெட் பகுதி, 1,300 சதுர அடி மொட்டை மாடி மற்றும் ஒரு தனியார் லிஃப்ட் ஆகியவற்றை வழங்குகிறது. தீபிகா படுகோனின் நிறுவனம் அதன் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை 17.8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதுவும் கடற்கரையோரம் நடிகர் ஷாருக் கான் வீட்டிற்கு மிகவும் அருகில் இருக்கிறது.

இதே போன்று ரன்வீர் சிங் வீட்டிற்கு அருகில் செயின்ட் மார்ட்டின் சாலையில் உள்ள நூற்றாண்டு

பங்களாவை நடிகர் ஜான் ஆபிரகாம் ரூ.84 கோடிக்கு வாங்கினார். இந்த சொத்து சுமார் 11,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது

இதற்கு முன்பு கார்ரோடு பகுதியில் உள்ள மற்றொரு பங்களாவை இவர் ரூ.70.83 கோடிக்கு வாங்கினார்.
பாந்த்ரா பாலி ஹில் பகுதியில் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் ஆறு மாடி கிருஷ்ண ராஜ் பங்களாவும் உள்ளது. 250 கோடி மதிப்பிலான இந்தக் குடும்ப மாளிகையில் செங்குத்துத் தோட்டங்கள், நீச்சல் குளம் மற்றும் அவர்களது மகள் ராஹாவுக்கான முழுத் தளமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அலியாவுக்கு ஜூகு வில் ரூ.13.11 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. பாலிவுட் நடிகை கிருதி சனோன் பாலிஹில் பகுதியில் 6,636 சதுர அடியில் ரூ.78.2 கோடி பங்களாவை வாங்கி இருக்கிறார். இது கடற்கரையோரம் இருக்கிறது.

பாந்த்ரா-ஒர்லி கடல் இணைப்பு பாலம் மற்றும் கடற்கரை சாலை ஆகியவை மூலம் தெற்கு மும்பைக்கு எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வீடுகளின் சராசரி விலைகள் ஒரு சதுர அடிக்கு ரூ. 75,000 ஆகும். அதே சமயம் பிரீமியமாக கடலை எதிர்கொள்ளும் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள வீடுகள் சதுர அடிக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.

இதே போன்று ஜூகு பகுதியும் கடற்கரையையொட்டி இருப்பதால் அங்கு சதுர அடி ரூ. 57,600க்கு விற்பனையாகிறது. வெர்சோவா பகுதியில் 2,644 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பை நடிகர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும் ரூ. 18.29 கோடிக்கு வாங்கியுள்ளனர். இங்கு நடிகை தபு ரூ.10 கோடிக்கு அதே கட்டடத்தில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க