திருப்பரங்குன்றம்: CRPF வீரர்களுக்குப் பூத்தூவிய இந்து அமைப்பினர் | Photo Album
மும்பை: 60 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; ரயில் நிலையக் கழிவறையில் கொடூரம்
மும்பை காட்கோபர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு 60 வயது பெண் ஒருவர் தனது 18 வயது மகளுடன் வந்தார். அவர் கடாவ்லி செல்வதற்காக புறநகர் ரயிலுக்காகக் காத்திருந்தார்.
அந்நேரம் கழிவறையின் நடைமேடையில் இருந்த கழிவறைக்கு அப்பெண் சென்றார். இரவு 11 மணிக்கு மேலாகி இருந்ததால் கழிவறையில் ஊழியர் யாரும் இல்லை. இதனால் கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பின்தொடர்ந்து வாலிபர் ஒருவரும் அந்தக் கழிவறைக்குள் சென்றார். அவர் கழிவறையை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பெண்ணின் முகம் மற்றும் நெஞ்சுப்பகுதியில் கடுமையாகத் தாக்கி காயத்தை ஏற்படுத்திவிட்டு அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இது குறித்து அப்பெண் வெளியில் வந்து தனது மகளிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனே இருவரும் இது குறித்து ரயில்வே போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர் காட்கோபர் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர் அசல்பா மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கியது கண்காணிப்பு கேமராவில் தெரிய வந்தது. உடனே அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அந்த நபரின் பெயர் தஸ்லிம் நூர் மொகமத் ஷா(27) என்று தெரிய வந்துள்ளது. அந்த நபர் போதையில் இக்காரியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து போலீஸார் தஸ்லிமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்கோபர் ரயில் நிலையத்தில் கழிவறை நடைமேடையின் ஒரு முனையில் இருந்தது. இதனால் அங்கு பயணிகள் அதிகம் செல்ல வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

















