செய்திகள் :

மும்மத பக்தர்கள் பங்கேற்ற தீவின் பெருவிழா... விடிய விடிய நடந்த புனித சந்தியாகபர் ஆலய திருவிழா!

post image

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின் 484-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் ஆரோன்  திருப்பலியை நிறைவேற்றினார்.

திருவிழா கொடியேற்றம்

இதனை தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடந்து வந்த இந்த நவநாள் திருவிழாவில் நாள் தோறும் மாலை வேளைகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள் பங்கேற்று திருப்பலியினை நடத்தினர். இதில் புனித தெரசாள் பங்கு, ஓலைக்குடா, மதுரை கொம்படி, பரமக்குடி குனப்பனேந்தல், காரங்காடு, புதுப்பட்டினம், பாம்பன், மண்டபம், முத்துப்பேட்டை, அக்காள்மடம், வேர்க்கோடு, ராமேஸ்வரம், அரியாண்குண்டு, தண்ணீர் ஊற்று உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இறைமக்கள் பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் புனித சந்தியாகப்பர் தேர்பவனி நேற்று இரவு நடந்தது. மறைவட்ட அதிபரும் ராமநாதபுரம் பங்கு தந்தையுமான சிங்கராயர் திருவிழா திருப்பலியினை நடத்தினார். இதனை  தொடர்ந்து புனித சந்தியாகப்பரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுடன், தீவு பகுதியில் உள்ள மும் மதங்களை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருவிழாவில் கூடிய பக்தர்கள்

இரவு முழுவதும் விடிய விடிய நடந்த திருவிழாவின் திருப்பலியினை  இன்று அதிகாலை சிவகங்கை அவியான்னி அருள்பணி மைய இயக்குநர் செபாஸ்டின் நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து இன்று மாலை திருவிழா நிறைவுத் திருப்பலியுடன் கொடியிறக்கமும் நடக்க உள்ளது. நவநாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் ஆரோக்கியராஜா, செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் விமல்ராஜ் மற்றும் பங்கின் இறைமக்கள், தீவு பூர்வீக கிருஸ்துவ அமைப்பினர் செய்திருந்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை - பாதுகாப்பு மையங்கள் அமைப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், உலக பிரசித்திபெற்ற அக்னி தலமாகும். இத்திருக்கோயிலுக்குள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளது என்று கோயில் துணை... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: கொடியேற்றத்துடன் துவங்கிய ராமநாதசுவாமி கோயில் ஆடிதிருவிழா; ஆகஸ்ட் 16-ல் திருக்கல்யாணம்!

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயில் `முக்தி’ துவாரம்; உடல் பருமனான பக்தர்கள் நுழைய தடை!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை வணங்கி குறுகிய துவாரம் வழியாக வெளியில் வந்தால் `முக்தி’ கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த துவாரம் மிகவும் குறுகலாக ... மேலும் பார்க்க

மழை வேண்டியும் காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும் வேள்வி யாகம்; முக்கொம்பில் குவிந்த விவசாயிகள்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு காவிரி ஆற்றங்கரையில் இந்த யாகம் நடைபெற்றது. கோ பூஜை செய்து, ஏழு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை மற்றும் வேள்வி யாகத்தை நடத்தினர். தொடர்ந்து, காவிரி அன்ன... மேலும் பார்க்க