செய்திகள் :

முற்பிறவியில் நீங்கள் யார்?ஜோதிடம் சொல்லும் அதிசய ரகசியங்கள்!

post image

வினைகளின் தொடர்ச்சியே பிறவிகளுக்குக் காரணம் என்கின்றன பண்டைய ஆன்மிக நூல்கள். அவ்வகையில் பூர்வ ஜன்மம், மறுபிறவி குறித்து அவை தரும் தகவல்கள் வியக்க வைப்பவை. ஜோதிடமும் முற்பிறவி குறித்து விவரிக்கிறது!

கருட புராணம்

கருடபுராணம் சொல்லும் தகவல்!

கரு தரித்து ஐந்தாவது மாதத்தில் காது, மூக்கு, மார்பு ஆகியன தோன்றும். ஆறாவது மாதத்தில் அந்தக் கருவிற்குக் கழுத்து, தலை, பற்கள் உண்டாகும். ஏழாவது மாதத்தில் குழந்தையின் பிறப்புறுப்புகள் உண்டாகும். எட்டாவது மாதத்தில் அனைத்து அவயவங்களும் உண்டாகும். ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்கிற நாபியின் மூலத்திலிருந்து பூர்வ ஜன்ம கர்மாக்கள் வந்து சேரும். பத்தாவது மாதத்தில் பிறப்பு நிகழும்’ என்கிறது கருடபுராணம்.

இதேபோல், இன்னும் பல புராணங்கள் பல்வேறு சம்பவங்கள் மூலம் முற்பிறவி மற்றும் மறுபிறவி குறித்து விவரிக்கின்றன. சகஸ்ர கவசன் கர்ணனாகப் பிறந்த கதை, வசுக்களில் ஒருவன் பீஷ்மராகப் பிறந்தது போன்ற திருக்கதைகள் மூலம் பூர்வஜன்மம் குறித்து விளக்குகின்றன.

அமானுஷ்யம்
ஜோதிட

ஜோதிடம் சொல்லும் ரகசியம் என்ன?

ஜாதகத்தில் நம்முடைய லக்னம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த ராசியிலிருந்து எண்ண வரும் 5-வது இடமே பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். இந்த ஐந்தாம் இடம், அந்த இடத்தின் அதிபதியாகத் திகழும் கிரகம், அவரின் நிலை, 5-ம் இடத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை ஆகியவற்றை வைத்து முற்பிறவி ரகசியங்களை - பாவ, புண்ணியங்களைக் கணிக்க இயலும் என்கிறது ஜோதிடம்.

நம் பூர்வஜன்ம ரகசியங்கள், முன் ஜன்ம வினைகளின் பலன்கள், முற்பிறப்பில் நம் மூதாதையரில் எவருடன் அதிகம் பொருந்துகிறோம் முதலான விவரங்களை பூர்வபுண்ணிய ஸ்தானம் மூலம் அறிய முடியும் என்கின்றன ஜோதிட நூல்கள்!

அவ்வகையில் உங்கள் லக்னத்தின் அடிப்படையில், பூர்வஜன்மம் முற்பிறவி குறித்த சில தகவல்களை அறியலாம்! (உங்களின் ஜாதகக் கட்டத்தில் `ல' என்று எந்த ராசியில் குறிப்பிடப் பட்டுள்ளதோ அதுவே உங்கள் லக்னம்).

முற்பிறவி ரகசியங்கள்

உங்கள் லக்னமும் பூர்வ ஜன்மமும்...

மேஷ லக்னம்: மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5-ம் இடமான சிம்மத்துக்கு உரிய கிரகம் சூரியன். ஜாதகர் ஆணாக இருந்தால், அவர் கொள்ளுத் தாத்தாவின் குணாம்சங்களைக் கொண்டிருப்பார். பெண் எனில், முற்பிறவியில் கொள்ளுத் தாத்தாவுடன் பிறந்த அத்தைப் பாட்டியாக இருந்திருப்பார். இவர்களின் ஜாதகத்தில் சூரியன் 5-ல் ஆட்சிப் பெற்றிருந்தாலும், மேஷத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் பரம்பரைச் சொத்துகளை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் நிறைய சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் பிறந்திருப்பார்கள். இந்த லக்னக்காரர்கள் பழநி முருகனையும், சபரிமலை ஐயப்பனையும் வழிபடுவதால் வளம் உண்டாகும்.

ரிஷப லக்னம்: இந்த லக்னத்துக்கு 5-ம் இடம் கன்னி. இதற்குரிய கிரகம் புதன். இந்த ஜாதகர் ஆணாக இருந்தால், முற்பிறவியில் அவரின் தாத்தாவாக இருந்திருப்பார். இவரிடம் தந்தையின் குணாதிசயங்கள் தென்படும். பெண் எனில் சென்ற தலைமுறையில் அத்தைப் பாட்டியாக இருந்திருப்பார். இப்போது அத்தையின் குணாதிசயத்துடன் திகழ்வார். புதன் கன்னியிலேயே உச்சம் பெற்று இருந்தால் நன்மைகள் அதிகரிக்கும். சுயமாக முன்னேறும் வல்லமை இவர்களிடம் உண்டு. ஆலோசனைகள் வழங்குவதில் சமர்த்தர். குலதெய்வ வழிபாடு இவர்களுக்குப் பலம் சேர்க்கும்.

மிதுன லக்னம்: இவர்களுக்கு 5-ம் இடம் துலாம். இந்த இடத்துக்கு உரிய கிரகம் சுக்கிரன். ஜாதகர் ஆண் எனில், முற்பிறவியில் எள்ளுத் தாத்தாவின் (தாத்தாவின் அப்பாவாக) தொடர்பு அதிகம் உண்டு. பெண் எனில், அத்தைப்பாட்டியின் அம்சம் உண்டு. இவர்கள் நான்கைந்து சகோதரிகளுடன் பிறந்திருப் பார்கள். ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் பகை அல்லது நீசம் பெற்றிருந்தால், உடன் பிறந்தவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இவர்களுக்குப் பெண்கள் மூலம் சொத்து சேரும் யோகம் உண்டு. மேலும், வாரிசு இல்லாத அத்தையின் சொத்தும் இவர்களுக்குக் கிடைக்கக்கூடும். இவர்கள், நாகை செளந்தர்ராஜ பெருமாள், திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.

கடக லக்னம்: 5-ம் இடம் விருச்சிகம். இதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் 5-ம் வீட்டில் இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர் களுடன் பிறந்திருப்பார்கள். ஜாதகர் ஆண் எனில், முற்பிறவியில் எள்ளுத் தாத்தாவின் தொடர்பு உண்டு. பெண் எனில், அத்தை வழியில் 3-ம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டியின் அம்சம் உண்டு. செவ்வாய்க்கிழமைகளில், நெய்தீபங்கள் ஏற்றி வைத்து குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையை வரமாக்கிக் கொள்ளலாம். இவர்களின் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் மேன்மை உண்டாகும்.

சிம்ம லக்னம்: ஐந்தாம் இடம் தனுசு. இந்த இடத்துக்குரிய கிரகமான குரு சொந்த வீட்டில் இருந்தால், அந்த ஜாதகர் அவருடைய எள்ளுத் தாத்தாவுக்கும் முற்பட்ட 5-வது தலைமுறையைச் சேர்ந்த ஒருவராகப் பிறந்திருப்பார். இப்படிப்பட்ட ஜாதகர் அதிர்ஷ்டசாலி என்று கூறும்படி சகல செல்வங்களும், நிலபுலன்களும் பெற்று சுகமாக வாழ்வார்கள். நீண்ட ஆயுள் உண்டு. இவர்களின் ஜாதகத்தில் குரு பகை, நீசம் பெற்றிருந்தால் வறுமையால் துன்பம் விளையும். குலதெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்னைகள் நீங்கும். இவர்கள் ஒருமுறை சூரியனார் கோயிலுக்குச் சென்று சூரியபகவானையும், சிக்கல் சிங்கார வேலரையும் வழிபட்டு வருவது விசேஷம்.

கன்னி லக்னம்: 5-ம் இடம் மகரம். அதிபதி சனிபகவான். ஜாதகத் தில் சனி 5-ல் ஆட்சி பெற்றிருந்தால், ஜாதகர் சிறிய தாத்தாவின் (தாத்தாவின் தம்பி) அம்சம் நிறைந்தவர். ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் அமைந்திருந்தால் சகல சுகபோகங்களுடன் வாழ்க்கை அமையும்; பெரும் செல்வந்தராகத் திகழ்வார். ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய்வாருங்கள்; சகல முன்னேற்றங்களும் உண்டாகும்.

முற்பிறவி ரகசியங்கள்

துலாம் லக்னம்: துலாம் லக்னத்துக்குப் பூர்வ புண்ணியாதிபதி சனி. இவர் எள்ளுத் தாத்தாவின் குணாம்சங்களுடன் பிறந்திருப்பார். பெரும்பாலும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்பு உண்டு. இவர்களுக்கு எதிர்பாராத வகையில் செல்வம் கிடைக்கும். சிலருக்குப் புதையல் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. பந்தயங்களிலும் பணம் சம்பாதிப்பார்கள். இவர்களுக்குச் சனி பகவான் பகை, நீசமாக இருந்தால், அரசாங்கத்தில் உயர் பதவி வாய்க்கும். திருக்கடவூர் சென்று வழிபடுவது விசேஷம்.

விருச்சிக லக்னம்: 5-வது இடம் மீனம். பூர்வ புண்ணியஸ்தானாதிபதி குரு. இவர் 5-ல் ஆட்சி பெற்று இருந்தால், ஜாதகர் சிறிய தாத்தாவின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார். கையில் ஆறு விரல்கள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 5-ல் குரு கெஞ்சினாலும் கிடைக்காது என்று சொல்லும்படி, இவர்கள் அனைத்து செல்வங்க ளையும் பெற்று, சுகமாக வாழ்வர். வீட்டிலேயே குலதெய்வத்தை வழிபட்டு வரம் பெறலாம்.

தனுசு லக்னம்: 5-ம் இடம் மேஷம். இதன் அதிபதி செவ்வாய். இவர்கள், எள்ளுத் தாத்தாவின் குணாம்சங் களுடன் திகழ்வர். இவரின் முன்னோர்களில் பலரும் ராணுவம், போலீஸ் என்று சீருடை அணிந்த பணியில் இருந்திருப்பார்கள். இவருக்கும் இவரின் முன்னோர்களுக்கும் அரசாங்க வீட்டில் வசிக்கும் யோகம் உண்டு. 5-ல் சூரியன், குரு, சுக்ரன் போன்ற கிரகங்கள் இருந்தால் மேன்மையான நற்பலன்கள் கிடைக்கும்.

மகர லக்னம்: 5-ம் இடம் ரிஷபம். இதன் அதிபதி சுக்ரன். இவர் 5-ல் ஆட்சி பெற்றிருந்தால், ஜாதகர் கொள்ளுத்தாத்தாவின் குணாம்சங்களைக் கொண்டிருப்பார். பெரும்பாலும் இவர்கள், நிறைய பெண் குழந்தைகளுக்குப் பிறகு கடைசிப் பிள்ளையாக பிறந்திருப்பார்கள். நிலம், கால்நடைகள், வாகன யோகம் என்று சுகபோகமாக வாழ்வார்கள். காலில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். 5-ல் சந்திரன், புதன், சனி ஆகியோரில் ஒருவர் இருந்தால் மேன்மையான பலன்கள் ஏற்படும். குரு இருப்பின் தெய்வ அனுகூலம் உண்டு. கும்பகோணம் கும்பேஸ்வரரை வழிபடுவது விசேஷம்.

கும்ப லக்னம்: கும்ப லக்னத்துக்கு 5-ம் இடமான மிதுனத்துக்கு உரிய கிரகம் புதன். இந்த லக்னக்காரர் ஆண் எனில், இவரிடம் தந்தையின் குணாம் சங்கள் நிறைந்திருக்கும். பெண் எனில், சென்ற தலைமுறையில் அத்தைப் பாட்டியாகப் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. இவர்களில் சிலருக்குப் புத்திர தோஷம் இருக்கலாம். திருவேங்கடவனை வழிபட்டு நன்மை அடையலாம். இவர்களுக்கு 5-ல் குரு, சுக்ரன், சனி - அதிர்ஷ்ட வாய்ப்புகள் அனுகூலம் உண்டு. உப்பிலியப்பனை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

மீன லக்னம்: 5-ம் இடம் மிதுனம். பூர்வ புண்ணியாதிபதி சந்திரன். சந்திரன் 5-ல் ஆட்சி பெற்று வலுவாக இருந்தால், ஜாதகர் அவருடைய எள்ளுத் தாத்தாவின் குணாம்சங் களுடன் பிறந்திருப்பார். இவர்களுக்குப் பெண்கள் மூலம் சொத்து கிடைக்கும். வாரிசு இல்லாத அத்தை வழியிலும் சொத்து கிடைக்க வாய்ப்பு உண்டு. இவர்களுக்குப் பெரும்பாலும் பெண் குழந்தை களே பிறப்பர். ஆசிரியர் பணியிலும் ஆன்மிகத் துறையிலும் ஈடுபட்டு பொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள், மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வந்தால் சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

பஞ்சாங்கக் குறிப்புகள் : நவ 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் மேலும் பார்க்க

கணவன் - மனைவி காதலைச் சொல்லும் வசியப்பொருத்தம்! உங்களுக்கு எப்படி?

கல்யாணத்துக்கு ஜாதகரீதியாக பத்து பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம். தினப்பொருத்தம், கணப் பொருத்தம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசிப்பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் ... மேலும் பார்க்க

அக்.31: சிம்மத்தில் குரு-கேது : எந்த ராசிக்கு யோகம், எந்த ராசிக்கு கவனம்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

கிரஹங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். ஸத்வ குணம் பொருந்தியவர் குரு. தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்... மேலும் பார்க்க

தொட்டது துலங்கும்... பன்மடங்கு பெருகும்... தவறவிடக்கூடாத 5 அற்புத முகூர்த்த வேளைகள்!

1. பிரம்ம முகூர்த்தம்: புதிய முயற்சிகளை கையில் எடுக்கப் போகிறீர்களா... அதுகுறித்த திட்டமிடலுக்கு மிக உகந்த நேரம் இது. பிரம்ம முகூர்த்தம் என்பது சூரிய உதயத்திற்கு சுமார் 1 மணி 36 நிமிடங்களுக்கு முன் தொ... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் : அக் 30 முதல் நவ 5 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க

வார ராசிபலன் | 26.10.26 முதல் 01.11.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் October 26th to November 1st 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, ... மேலும் பார்க்க