செய்திகள் :

"மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது, ஆனால்..!"- விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதென்ன?

post image

எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார்.

விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

இது​வரை நான் அறிவிக்​க​வில்​லை. தவெக கூட்​ட​ணி​யில் இருக்​கிறோமோ என்றும் அறிவிக்​க​வில்​லை. ஒரு​வேளை தவெக தலை​மை​யில் கூட்​டணி உருவா​னால், அதில் இடம்​பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்​லை.

திமுக தலை​வர்​கள் அனை​வரும் ஒன்​று சேர்ந்து விசிக​விலிருந்து ஒரு​வரை அழைத்து கட்​சி​யில் இணைத்​த​போது, திமுக தலை​மையே எங்​களு​டன் உறவு இல்லை எனச் சொல்​லி​விட்​டது. விசிக​வுடன் கூட்​டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டா​லின் தான்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், "அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது. விசிகவில் அதிருப்தி அடைந்து விலகிய முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

`விளம்பர மோகம்; பள்ளிக் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறல்' கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு... போலீஸ் புகார் - என்ன நடக்கிறது?

தூத்துக்குடியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் வ... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ். சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து 'அரப் லைட்' (Arab Light) எனும... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இர... மேலும் பார்க்க

`ஆங்கிலம் தான் அறிவா? ஏன் இதுவரை Last Bench ஸ்டூடென்ட் முன்னேறியதே இல்லையா அமைச்சர் கீர்த்தனா?'

"இவங்க கிட்ட சிம்பிளா, 'What is your Father?'ங்கற தான் கேட்டோம். ஆனா, அதுக்குமே அவங்களால பதில் சொல்ல முடியல...'(ஃபர்ஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மாணவியிடம் 'What is your name?', 'What is your F... மேலும் பார்க்க