செய்திகள் :

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

post image

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.

ஏன் இந்த ஒப்பந்தம்?

இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த ஒப்பந்தம், எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராகக் கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதலானது, மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

மெக்கா ஒப்பந்தம்
மெக்கா ஒப்பந்தம்

அதுமட்டுமன்றி, இம்மூன்று நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.

இதை தவிர, இந்த ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை. இதனால், இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது எந்த விதமான தாக்குதல் நடத்தப்பட்டாலும், மற்ற இரு நாடுகளும் உதவிக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதென்ன கேள்வி... எந்த விதமான தாக்குதலாக இருந்தாலும் மற்ற இரு நாடுகளும் உதவிக்கு வரும் என்று நினைத்தால், 2025-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இடையே, இதே போன்ற, மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (SMDA) ஒன்று போடப்பட்டிருந்தது.

ஈரான் போரில் சவூதி அரேபியாவை ஈரான் தாக்கியது... ஆப்கான் தாலிபன்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், இந்த இரு சம்பவங்களிலுமே இரு நாடுகளும் பரஸ்பர உதவிக்குச் செல்லவில்லை. அதனால் தான், மேலே கூறியுள்ள கேள்வி எழுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்தியாவிற்கு ஆபத்தா?

இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இருப்பதால் இந்தக் கேள்வி எழுவது மிக இயல்பே.

சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நீண்ட கால நட்பு நாடுகளும். இரு நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் வேறு. தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுமே உள்ளது.

இந்தச் சூழலில் எடுத்துக்கொண்டால், இந்தியாவிற்கும், சவூதி அரேபியாவிற்கு பெருமளவில் எந்தப் பிரச்னையும் எழுந்ததில்லை.

இரு நாடுகளுக்கு இடையேயும் 2024-25 நிதியாண்டில் 41,877.63 மில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இரு நாடுகளிடையேயும் உறவு சுமுகமாகவே உள்ளது.

இருந்தும், இந்தியா சவூதி அரேபியா விஷயத்தில் கவனிக்க வேண்டியவை...

சவூதியிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தியர்கள் பலர் அங்கு பணிபுரிகின்றனர். அதனால், பாகிஸ்தானின் நட்புக்கு மத்தியில், இந்தியா சவூதி அரேபியா உடனான உறவைப் பேணிக் காக்க வேண்டும்.

இந்தியா வளைகுடா நாடுகளுடன் நட்பை இன்னும் வலுபடுத்த வேண்டும் என்பதற்கான அலாரம் இது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியா
இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் வளைகுடா நாடுகளுடன் நெருங்கும் போது, இது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஒரு தனிமைப்படுத்துதலை உருவாக்கலாம்.

வளைகுடா நாடுகளுடன் மட்டுமல்லாமல், இந்தியா பிற உலக நாடுகளுடனும் உறவை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அது எல்லா விதத்திலுமே இந்தியாவிற்கு உதவியாக இருக்கும்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போ... மேலும் பார்க்க

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமை... மேலும் பார்க்க

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts). இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசட... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' - தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங... மேலும் பார்க்க