செய்திகள் :

மெக்சிகோ மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

post image

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோ எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் டிரம்புடன் தொலைபேசி வழியாக திங்கள்கிழமை(பிப். 3) பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

அதனைத்தொடர்ந்து, கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாள்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட இரு நாட்டு தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்ஆ - மெக்சிகோ எல்லையில் உடனடியாக 10,000 ராணுவ வீரர்களை நிறுத்துவதற்கு கிளாடியா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வீரர்கள் எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழையும் மக்களை தடுத்து நிறுத்துவார்கள். மேலும் 25 சதவீத வரிவிதிப்பை தற்காலிகமாக ஒரு மாதகாலம் நிறுத்திவைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேறும் வரையில் பேச்சு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்

பாங்காக் : காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளனர்.பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காஸாவில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆயுதப் படையான ஹமாஸ் படைப் பிரிவ... மேலும் பார்க்க

நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!

‘நமீபியாவின் நிறுவனத் தந்தை’ எனப் போற்றப்படும் சாம் நியோமா சனிக்கிழமை(பிப். 8) காலமானார். அவருக்கு வயது 95.ஆப்பிரிக்க தேசமான நமீபியா தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திர... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவு: 30 போ் மாயம்

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 போ் மாயமாகினா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 வீடுகள் பு... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் பைறிமாற்றம் செய்துகொண்டன.முதலில், காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் இலி ஷாபரி (52), ஒஹாத் பென் எ... மேலும் பார்க்க

‘கனடாவை மாகாணமாக்க டிரம்ப் முயல்வது உண்மை’

‘கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணம் என்று அதிபா் டிரம்ப் கூறுவது வெறும் வேடிக்கைகாக அல்ல, உண்மையிலேயே அவருக்கு அந்த திட்டம் இருக்கிறது. கனடாவின் இயற்கை வளங்களை டிரம்ப் குறிவைக்கிறாா்’ என்று கனடா பிர... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு வீட்டுச் சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.இது கு... மேலும் பார்க்க