செய்திகள் :

மெத் கடத்தல்: ”செய்தியில CM விஜய் போட்டோ போட்ட, காலி பண்ணிடுவேன்”- நிருபர்களை மிரட்டும் தவெக-வினர்

post image

நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர் தவெக-வில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா இலங்கைத் தமிழர்.

வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர்ந்தவர் சுகன். இவர் வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றை லீஸ்க்கு எடுத்து நடத்தி வந்தார். நாகப்பட்டினத்தில் இருந்து இலைங்கைக்கு கடல் வழியாக மெத்தபெட்டமைன் கடத்த இருப்பதை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாறனுடன் பூபாலன்
தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாறனுடன் பூபாலன்

இதையடுத்து கடந்த 16ம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சுகன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சுகன் வீட்டில் இருந்து 135 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.270 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

இது குறித்து சுகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பூபலனைக் கைகாட்டினார். பூபாலன் தலைமையில் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இதுதொடர்பாக பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரித்த பின்னர் சிறையில் அடைத்தனர். தவெக நிர்வாகி மெத் கடத்தலில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில், மெத் கடத்தல் தொடர்பாக செய்து வெளியிட்ட டிவி நிருபர்கள் சிலரை தவெக-வினர் மிரட்டியுள்ளனர்.

குறிப்பாக ஒரு டிவி சேனல் நிருபரை தவெக-வின் நாகை நகரச் செயலாளர் பாலு வாட்ஸப் காலில், ''இதுதான் கடைசியா இருக்கணும், சி.எம்க்கும், மாவட்ட செயலாளருக்கு எதிரா செய்தி போட்டா காலி பண்ணிடுவேன்'' என மிரட்டியுள்ளார்.

பாலு
பாலு

இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் சார்பாக அனைத்துப் பத்திரிகையாளர்களும் நாகப்பட்டினம் எஸ்பி கெல்கேர் பாலசந்திரனிடம் தவெக நிர்வாகி பாலு மீது அளித்தனர். இதைத்தொடர்ந்து பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலும் தவெகவைச் சேர்ந்தவர்கள் நிருபர்களுக்கு போன் செய்து பெயர் சொல்லாமல் மிரட்டுவது தொடர்தாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், ''தவெக-வின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாறன். இவர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிப்பட்டு வருகிறார். தேர்தலுக்கு முன்பு தன் கட்சி நிர்வாகி ஒருவரை தலையை வெட்டி ரோட்டில் வீசிடுவேன் என மிரட்டியது தொடர்பாக வீடியோ வெளியானது.

இதைத்தொடர்ந்து நாகை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டதால் அடக்கி வாசித்தார். சுகுமாறன் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிக்கு நோட் போட்ட உளவுத்துறை போலீஸ் ஒருவரை நிகழ்ச்சி ஒன்றில் பலர் முன்னிலையில் மிரட்டியதும் சர்ச்சையானது.

சுகன்
சுகன்

இதுகுறித்த செய்தி மீடியாக்களில் வெளியானது. அப்போது டிவி நிருபர் ஒருவரை கட்சியினர் மூலமாக மிரட்டினார். இந்நிலையில்தான் மெத் கடத்தல் வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டார். இவர் சுகுமாறனுக்கு நெருக்கமானவர். மெத் கடத்தலில் பூபாலன் கைது செய்யப்பட்டது குறித்து மீடியாக்களில் செய்தி வெளியாது.

அப்போது சுகுமாறன் பெயரும் குறிப்பிடப்பட்டது. பூபாலன் சிம் விஜய், சுகுமாறனுடன் இருக்கும் போட்டோக்கள் வெளியானது. எதிர்க்கட்சிகள் மெத் கடத்தல் குறித்து விமர்சனைத்தை முன் வைத்தன.

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கட்சியில் ஏன் அடைக்கலம் கொடுத்தார் எனத் தவெகவைச் சேர்ந்தவர்களே சுகுமாறனுக்கு எதிராக முணுமுணுத்தனர். ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போதே பூபாலனை கட்சியில் இருந்து நீக்குவதாக சுகுமாறன் அறிக்கை வெளியிட்டார். பூபாலனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்ட பிறகு அவரை நீக்கி என்ன பயன், கட்சியில் சேர்க்கும் முன்னரே தெரிந்து கொண்டு சேர்த்திருக்கலாம் எனச் சுகுமாறனுக்கு எதிர் அணியினர் பேசி வந்தனர்.

பூபாலன்
பூபாலன்

இந்நிலையில்தான் தவெக நகரச் செயலாளர் பாலு, நிருபர் ஒருவரை மிரட்டினார். தவெக-வினர் மூன்று நிருபவர்களைத் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். சி.எம், மாவட்டச் செயலாளர் போட்டோவையும் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று சொல்லிதான் மிரட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் புகார் அளிக்க பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னரும் மிரட்டல்கள் தொடர்வதாகச் சொல்கிறார்கள். தவெக தலைமை இது போன்ற செயல்களை ஊக்குவிக்காமல் கட்சி நிர்வாகிகளைக் கண்டிக்க வேண்டும் என்றனர்.

மாவட்டச் செயலாளர் சுகுமாறன் சார்பாக நிர்வாகி ஒருவர் சுகுமாறன் குறித்து காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்புவதாக திமுகவைச் சேர்ந்த பாரிபாலன், அதிமுகவைச் சேர்ந்த மணிமாறன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மும்பையில் மீண்டும் துப்பாக்கி சத்தம் : நிழல் உலக காலியிடத்தைநிரப்பும் வட இந்திய கேங்ஸ்?

மும்பையில் 2000ம் ஆண்டு வரை இருந்த ரவுடிசம் மற்றும் மாபியா போன்ற நிழலுக தாதாக்கள் தொடர் என்கவுண்டர் மூலம் பெரும் முயற்சிகளுக்கு பின் ஒழிக்கப்பட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு ரவுடியோ... மேலும் பார்க்க

'புல்வாமா, தொடர்பான பணம் உங்க வங்கி கணக்கிற்கு வந்துள்ளது' - ஓய்வு நீதிபதியிடமே ரூ.2.50 கோடி பறிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெற்கு ஜோதி நகர் சத்யவிஹார் காலனியைச் சேர்ந்தவர் கணபத் சிங் பண்டாரி (90). ஓய்வுபெற்ற நீதிபதியான இவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்... மேலும் பார்க்க

பெருந்துறை:தாலிக்கொடிக்காக இளம்பெண் துடிதுடிக்க கொலை - செவிலியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த செவிலியர் உத்ரா பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14- ம்‌ தேதி மாலை திடீரென காணாமல் போனார். பணி... மேலும் பார்க்க

பயணிகளை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமிகள்; திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... கைது செய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவரின் மகன் கோவிந்தராசு (வயது: 46). இவர், தனது நண்பர் மகாதேவனோடு திருப்பூரில் இருந்து மங்களூர் விரைவு வண்டியில் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி ... மேலும் பார்க்க

``நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா?'' - ராணுவ அதிகாரி மனைவி கைதின் அதிர்ச்சி பின்னணி!

ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி வரும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் முகவர்களிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாக ஜம்ம... மேலும் பார்க்க

ஆந்திர சிறுமிக்கு கேரள ஸ்பாக்களில் நடந்த கொடூரம்; பாலியல் தொழில் கும்பலிடம் விற்ற சித்தி கைது!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தாய்-தந்தை இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து தனது சித்தியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு ஆதரவற்ற அச்சிறுமியை பாலியல் நெட்வொ... மேலும் பார்க்க