செய்திகள் :

``மேகதாது என் இதயத்திற்கு நெருக்கமானது: முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்!"- டி.கே.சிவக்குமார்

post image

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பாக, ``தமிழ்நாட்டின் முதல்வர் சி.ஜோசப் விஜய் உடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன்" என கர்நாடக முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மேகதாது திட்டம் குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவித தயக்கமும் இல்லை. தமிழ்நாட்டின் முதல்வருடன் எந்தவொரு தருணத்திலும் பேச நான் தயாராக உள்ளேன். தமிழ்நாடாக இருந்தாலும் சரி, கர்நாடகாவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் ஒரே நாடு, ஒரே மக்கள். ஒரே நதியின் தண்ணீரைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். விவசாயம், குடிநீர் மற்றும் தொழில்துறை என அனைத்துக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

காவிரி ஆறு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களையும் வாழ வைக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கர்நாடகாவில் பணிபுரிகின்றனர். அதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர். எனவே, இந்தச் சிக்கலை நாம் ஒரு குறுகிய நோக்கில் பார்க்கக் கூடாது.

தமிழ்நாட்டின் அரசில் காங்கிரஸ் ஒரு கூட்டணிக் கட்சியாக உள்ளது. நாங்கள் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்துவோம். இத்திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாம் பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

மேகதாதுவில் அமையவுள்ள சமநிலை நீர்த்தேக்கம் கர்நாடகாவுக்கு தண்ணீரை முறைப்படுத்த உதவுவதோடு, வறட்சி காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை உறுதி செய்ய வழிவகுக்கும். இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டுவதன் மூலம், நெருக்கடி காலங்களிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 177 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்குவதை எங்களால் உத்தரவாதம் செய்ய முடியும். மேலும் மாண்டியா, ஹாசன், சாமராஜநகர் மற்றும் துமகூரு போன்ற மாவட்டங்களுக்குத் தேவைப்படும்போது தண்ணீரைத் திறக்க முடியும்.

மேகதாது என் இதயத்திற்கு நெருக்கமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் முக்கியமானது. சொல்லப்போனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 177 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விடுவதில் நாங்கள் உறுதியாக இருப்பதால், இத்திட்டத்தால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கே அதிகப் பயன் கிடைக்கும்.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு, பெங்களூருவின் அதிகரித்து வரும் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது. மேகதாது என்பது ஒரு சமநிலை நீர்த்தேக்கம் மட்டுமே. அனுமதிக்கப்பட்டதைத் தாண்டி ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட எங்களால் பாசனத்திற்குத் திருப்ப முடியாது. இத்திட்டம் முதன்மையாக குடிநீர் தேவையை நோக்கமாகக் கொண்டது. பெங்களூருவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் நகருக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது.

கிருஷ்ணா நதிப் படுகையிலிருந்து எங்களால் தண்ணீரைக் கொண்டு வர முடியாது. காவிரிதான் எங்களின் முதன்மை ஆதாரம். கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகிறது. அவர்களின் அரசியலில் தலையிட நான் விரும்பவில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே நீதிமன்றங்களால் பரிசீலிக்கப்பட்டு, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகள் இரு மாநிலங்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளன.

தமிழ்நாட்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீரைத் திறப்பது எங்கள் பொறுப்பு. கடந்த ஆண்டு மட்டுமே 400 டி.எம்.சி-க்கும் அதிகமான தண்ணீர் கடலில் சென்று கலந்தது. தமிழ்நாடு தன் எல்லைக்குள் கட்டியுள்ள அணைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அதேபோல் கர்நாடக எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்கக் கூடாது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

மேலும், இந்த விஷயங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டவை. கர்நாடகாவின் சொந்த நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது மற்றும் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் பங்கைத் தொடர்ந்து வழங்கும்போதும் எந்தப் புகாரும் இருக்க நியாயமில்லை. இத்திட்டத்திற்காக தமிழகத்திடம் இருந்து எந்தவித நிதி உதவியையும் கர்நாடகா எதிர்பார்க்கவில்லை. குடிநீருடன் சேர்த்து இத்திட்டம் மூலம் சுமார் 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.

தமிழ்நாட்டின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அவர்களின் மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து, அடுத்தகட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டை மத்திய நீர் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கிய பிறகு, இனி விவாதிக்க என்ன இருக்கிறது? தமிழ்நாட்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீரை வழங்க நாங்கள் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளவில்லையா? தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் மற்றும் அரசியல் பிழைப்பிற்காக இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் JD-S ஆகிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பாடுபடுவார்கள்." என்றார்.

'நாங்க என்ன கருணாநிதியா... ஸ்டாலினா?' - சீறும் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் | பேட்டி

சட்டமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில, 17.06.2026 தேதியில் ஜூனியர் விகடன் இதழில் வெளியான அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டியின் ஒரு பகுதி இங்கே.. CTR Nirmal Kumar - TVK... மேலும் பார்க்க

ஆளுநர் உரை: ``வரவேற்கிறோம்... ஆனால் விளக்கம் வேண்டும்" - சிபிஎம் சந்தேகங்களும் கேள்விகளும்!

இன்று தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையில் தவெக அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து இடம்பெற்றவை தற்போது விவாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சிபிஎம் சண்முகம் தன் எக்ஸ... மேலும் பார்க்க

'சிவப்பு துண்டுடனேயே தவெகவில் பயணிப்பேன்!' - தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்திருக்கிறார். சி.மகேந்திரன்திமுக, அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் தவெக-வில் இணைந்து வரு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி; சாட்டையைச் சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கை தொடருமா?!

ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள்புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள்... மேலும் பார்க்க

`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுகவில் இணைந்த ஸ்ரீநிதி

கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்... மேலும் பார்க்க