செய்திகள் :

மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன?

post image

2014-ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக, அவர் வசித்த பகுதிக்கு அருகிலுள்ள தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கை திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதா? அல்லது தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் இரு கட்சி ஆதரவாளர்களிடையே தீவிரமடைந்துள்ளது.

மேஜர் முகுந்த் வரதராஜன்

தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது கிடைத்த தகவலின்படி, மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டிலேயே தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அப்பகுதி மக்கள், தாம்பரம் விமானப்படை தள அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலரும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். எனினும், அப்போதைய அதிமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் கோரிக்கை நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, 2025-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், ராணுவ உயர் அதிகாரி ஆர்.என். ஸ்ரீனிவாசன், அப்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் இதுதொடர்பாகக் கடிதம் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, கோப்பைத் தாம்பரம் மாநகராட்சிக்கு அனுப்பியது.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" எனப் பெயரிடும் தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் அந்தத் தீர்மானம் அரசின் இறுதி ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கோப்புக்கு அரசு ஒப்புதல் வழங்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு தலைமை செயலகம்
தமிழ்நாடு தலைமை செயலகம்

இதற்கிடையில், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கோப்பு இன்னும் நிலுவையில் இருப்பது குறித்து மனிதவளம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் சரத் மூலம் முதலமைச்சர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் முதலமைச்சர் விஜய் இறுதி ஒப்புதலை வழங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு இறுதி ஒப்புதல் வழங்குவது தமிழ்நாடு அரசின் அதிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கிடைத்த அதிகாரப்பூர்வத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பெயரிடும் நிர்வாக நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. அரசின் இறுதி ஒப்புதல் தவெக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கையில் இரு ஆட்சிகளிலும் வெவ்வேறு கட்டங்களில் பங்களிப்பு இருந்துள்ளது என்பது அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் விளக்கமாகும்.

"அந்தச் சமயத்தில் சுவேந்து அதிகாரிதான் ஆறுதல் சொன்னார்" - TMC மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர... மேலும் பார்க்க

PMK: இணைந்த தந்தை - மகன் இதயங்கள்! - இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா‌.ம.க- வில் பதவி வழங்குவதில் ... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வராயன்மலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்... மேலும் பார்க்க

‘சார்... ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.ஜி.பி அருணுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதனால் முன்னாள்... மேலும் பார்க்க

'மின்துறையின் கடன் இப்போது ரூ.2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது' - மின் வாரியத்தின் வெள்ளை அறிக்கை

கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு,நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த ... மேலும் பார்க்க

'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?

`பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்போவதாக' மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார்.திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாத... மேலும் பார்க்க