செய்திகள் :

'மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத சத்யபாமா; ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?

post image

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் விஜய் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா திடீரென கண்கலங்கி எமோஷனலாக பேசினார்.

சத்யபாமா
சத்யபாமா

சத்யபாமா பேசியதாவது, ' தலைவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நான் இங்கே பார்ப்பதை கனவா நனவா என சொல்ல முடியவில்லை. நாங்கள் எத்தனையோ கூட்டத்துக்கு சென்றிருக்கிறோம். காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருவார்கள். உடனே கலைந்துவிடுவார்கள்.

ஆனால், இங்கே கூட்டம் அப்படியே காத்திருக்கிறது. புரட்சித் தலைவரை காண வரும் கூட்டத்தைப் போல இருக்கிறது. புரட்சித் தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டாரோ... எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் உடன்படிக்கை செய்துவிட்டு எங்களிடம் வந்து நான் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என மகிழ்ச்சியாக கூறினார். எடப்பாடி பழனிசாமி என்கிற தலைமை பிடிக்காமல்தான் நாங்கள் வெளியே வந்தோம். அந்தக் கட்சிக்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை.

சத்யபாமா
சத்யபாமா

ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆனந்த் அண்ணனே சாட்சி. பொதுச்செயலாளர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடப்பாடியே சாட்சி. ஒரு பெண் என்றும் பாராமல் வலைதளங்களில் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள். போனை பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் என்ன தவறு செய்தேன்? அம்மாவுக்கு உண்மையாக இருந்தேன். திமுகவுடன் கூட்டணி பேசியதால்தான் நான் அந்த கட்சியிலிருந்து வெளியேறினேன். உங்களின் பதவி சுகத்துக்காக என்னை ஆபாசமாக பேசுகிறீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை..' எனக் கூறி கண்கலங்கி அழுதார்.

உடனே முதல்வர் விஜய் அவரின் தோளை தட்டி ஆறுதல் கூறினார்.

CM Vijay : 'திமுக மாதிரி வேடம் போட்டு பம்ம மாட்டோம்!' - சாடித் தள்ளிய முதல்வர் விஜய்

தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக சாடியிருந்தார்.CM Vijay'முதல்வர் விஜய் பேசியதாவது, 'ஆட்சியமைத்த 100 நாள்களில் மா... மேலும் பார்க்க

``நான் அமைச்சராகப் போகிறேனா?" - சௌமியா அன்புமணி கொடுத்த ரியாக்ஷன் என்ன?

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக, மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்ற... மேலும் பார்க்க

`அறிவிருக்கா தெரியலை...' - சாடிக் கொள்ளும் முன்னாள் - இன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஜபி தரிசனம் செய்த அமைச்சர்கள், எம்.பி-கள் குறித்து முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்ட காவலர் ராஜா உயிரிழப்பு

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அத்தொடர் போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க

"This guy is a Monster" – சுந்தர் பிச்சை குறித்து Trump; சிரித்தபடி பதிலளித்த Google CEO

அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக... மேலும் பார்க்க

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' - விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்!

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் தவெகவினர் பரப்பி வரும் இந்தத் தகவலுக்குப் பின... மேலும் பார்க்க