செய்திகள் :

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

post image

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிலை குறித்து இரு தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ``எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் இன்று பேசினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து எங்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான தீர்வுகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கத் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதற்கிடையில், போர் தீவிரமடைவது, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட வாய்ப்புள்ள தட்டுப்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர 'பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்' மட்டுமே வழி என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அங்குள்ள நாடுகள் மற்றும் முக்கிய சர்வதேச நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் மேற்கு ஆசியாவிற்கு முக்கியப் பங்கு இருப்பதால், தற்போதைய நிலவரம் மிகுந்த கவலையை அளிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு ஆசியாவின் நிலையை இந்தியா மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், தேசிய நலனையும் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! - பின்னணி காரணம் என்ன?

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.2021-ம் ஆண்டு தி.மு.க அரச... மேலும் பார்க்க

ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல்வர்... மேலும் பார்க்க

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்த தி.மு.க-வுக்கு அடுத்த சிக்கல் பிற கூட்டணிக் கட்சிகளால் துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்களை விட்டுக் கொடுத்ததுபோல தங்களுக்கும் கூடுதல் தொகுதி... மேலும் பார்க்க

'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்

முறிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்றி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை கட்டிக் காக்கும் விதம் மெச்சத்தகுந்தது என அரசியல் விமர்சகர்களே பாராட்டுகின்றன... மேலும் பார்க்க

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல... மேலும் பார்க்க

கர்னாடிக் சிங்கர், ஹாக்கி ப்ளேயர், 'உம்மன் சாண்டி'யின் சிஷ்யன்! - யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் தலைமையின் சாய்ஸ் கிறிஸ்டோபர் திலக்காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு... நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்... மேலும் பார்க்க