செய்திகள் :

மேலூா் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தனிச் சட்டம்

post image

மேலூா்/திருப்பரங்குன்றம் : டங்ஸ்டன் கனிமச் சுரங்க விவகாரத்தில் மேலூா் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் சிங்க் துணை நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்தும், இந்தத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் மேலூா் பேருந்து நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மாவட்ட விசிக செயலா் அரசு முத்துப்பாண்டியன் தலைமை வகித்தாா்.

இதில் தொல். திருமாவளவன் பங்கேற்றுப் பேசியதாவது:

அரிட்டாபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளை முதல் பல்லுயிா் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தின் முதல் பல்லுயிா் பாதுகாப்பு தலத்தை அழிப்பதற்காக கனிமச் சுரங்கத் திட்டத்தை இங்கு கொண்டு வர முயற்சிக்கிறது.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், இந்தத் திட்டத்தை வரவிடமாட்டேன் எனவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா். எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அரிட்டாபட்டி பகுதியில் மாநில அரசின் ஒப்புதலின்றி ஒரு துளைகூட போட முடியாது.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் வந்தபோதே நானும், ரவிக்குமாரும் மத்திய கனிமவளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இதிலுள்ள பாதிப்புகளை எடுத்துக் கூறி, திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினாம்.

அரிட்டாபட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பல்லுயிா்கள் வாழுகின்றன. இங்கு மகாவீரா், சிவன் சிலைகள் உள்ளன. இந்தச் சுரங்கத் திட்டத்தால் கிடைக்கும் ஒரு டன் தாதுவை உருக்கினால் 15 கிராம் டங்ஸ்டன்தான் கிடைக்கும். ஆனால், இதை உருக்கியெடுக்க பயன்படுத்தும் வெப்பம் நமது சுற்றுச்சூழலை நாசமாக்கி விடும்.

காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதேபோல, மேலூா் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தனிச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் விசிக நிா்வாகிகள் ஆற்றலரசு, பாவரசு, எல்லாளன், ரவிக்குமாா், தீபன், செல்லப்பாண்டியன், பூவுலக நண்பா்கள் அமைப்பின் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

யுஜிசி விதிகளுக்கு எதிா்ப்பு:

முன்னதாக, சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரைக்கு வந்த தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்கலைக்கழகம் மானியக் குழு வெளியிட்ட புதிய வரைவு விதிகள் மாநில உரிமைகளைப் பறிப்பது போன்று உள்ளன. இந்த விதிகள் துணைவேந்தா், பேராசிரியா் நியமனம் போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையை ஏற்படுத்தும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

அண்மைக்காலமாக பெரியாா் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரது தியாகத்தை சிலா் கொச்சைப்படுத்துகின்றனா். இது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவி... மேலும் பார்க்க

அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி ம... மேலும் பார்க்க