தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ; 6 பிரிவுகளில் வழக்கு! -...
மோடி - ட்ரம்ப் சந்திப்பு: செய்தியாளர் கேள்வி-பதில் 'நோ' சொன்ன இந்தியா; மறந்துப்போன ட்ரம்ப், பிறகு.?
இந்தியப் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பது இல்லை. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ இதற்கு நேர் எதிர்.
தினமும் அவர் எப்படியாவது செய்தியாளர்களைச் சந்தித்துவிடுவார்.
கடந்த ஜூன் மாதம் பிரான்சில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. அதில் மோடியும் ட்ரம்ப்பும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.
அந்த உச்சிமாநாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றைத் தற்போது பகிர்ந்துள்ளார் செர்ஜியோ கோர்...
செர்ஜியோ கோர் (Sergio Gor) தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த இவர், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முக்கியப் பணியோடு புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“உண்மையைச் சொல்லப்போனால், எங்கள் அதிபருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள ஆழமான, தனிப்பட்ட நட்பு எனது பணியை மிகவும் எளிதாக்கியுள்ளது.
நீங்கள் ஊடகங்களில் பார்த்தது போலவே, அது மிகவும் இயல்பான ஒரு பிணைப்பு.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜி7 உச்சிமாநாட்டிற்கு அதிபர் ட்ரம்புடன் நான் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
நாங்கள் மேடைக்குப் பின்னால் இருந்தபோது, ஒரு கட்டத்தில் அதிபரும் நானும் மட்டுமே தனியாக இருந்தோம்.
அப்போது அவர் என்னிடம், ‘இந்தியத் தரப்பில் என்னென்ன விஷயங்களைப் பேசப்போகிறார்கள்?’ என்று கேட்டார். நாங்கள் சில தலைப்புகளைப் பற்றி விவாதித்தோம்.
பிறகு அவர், ‘அவர்கள் தரப்பில் ஏதேனும் கோரிக்கைகள் இருக்கிறதா?’ எனக் கேட்டார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஒரே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது ‘செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கலாம், ஆனால் கேள்வி-பதில் நேரத்துடன் கூடிய முழுமையான செய்தியாளர் சந்திப்பாக அது இருக்கக் கூடாது’ என்பதுதான் அது.
அதை நான் அதிபரிடம் கூறியதும், ‘கண்டிப்பாக, அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று ஒப்புக்கொண்டார்.

பிறகு கூட்டம் தொடங்கியது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கேமராக்களுடன் செய்தியாளர்கள் உள்ளே வந்தார்கள்.
ஒருபுறம் அதிபரும், மறுபுறம் பிரதமரும் அமர்ந்திருந்தனர். இருவருமே சில நிமிடங்கள் பேசினார்கள். பேசி முடித்த அடுத்த கணமே, அதிபர் செய்தியாளர்களைப் பார்த்து, ‘ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?’ என்று வழக்கம் போல் கேட்டுவிட்டார்!
அவ்வளவுதான், அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 45 நிமிடங்களுக்கு அனைத்து விஷயங்களைப் பற்றியும் திறந்த மனதோடு பேசக்கூடிய ஒரு செய்தியாளர் சந்திப்பாகவே அது மாறிப்போனது.” என்றிருக்கிறார்.











