செய்திகள் :

'யார் Boss என்று நெதன்யாகுவுக்கு தெரியும்' - ட்ரம்ப்; ஈரான் போருக்கு பின், விரைவில் சந்திப்பு!

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தான் ஈரான் மீது போரை தொடங்கின.

ஆனால், இப்போது அமெரிக்கா 'போர் நிறுத்தம்' என்கிற வெள்ளைக் கொடியோடு நிற்க, இஸ்ரேல் இன்னும் முறுக்கிக் கொண்டே இருக்கிறது.

அதாவது, அமெரிக்காவும், ஈரானும் டிஜிட்டல் முறையில் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்டு விட்டது.

ஆனால், இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. அதனால், ஈரான் ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடுகிறது... அதில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

நெதன்யாகு - ட்ரம்ப்
நெதன்யாகு - ட்ரம்ப்

இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது. இப்படி மீண்டும் குழப்பம் உண்டாகிறது.

இதற்கு மிக முக்கிய காரணமே இஸ்ரேல் தான்.

இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

துருக்கியில் நேட்டோ மாநாடு ஜூலை 7-8 நடக்க உள்ளது. இதில் ட்ரம்ப் கலந்துகொள்கிறார்.

இதனால், இந்தப் பயணத்திற்குப் பிறகு ட்ரம்பை சந்திக்கிறார் நெதன்யாகு‌‌ என்று கூறப்படுகிறது.

இது குறித்து Axios செய்தி நிறுவனத்திற்கு ட்ரம்ப் கொடுத்த போன் கால் பேட்டியில், "நாங்கள் இருவரும் மிக நெருக்கமாக, நல்ல சுமுகமான உறவில் இருந்து வருகிறோம்.

இங்கு யார் Boss என்பது நெதன்யாகுவுக்கு நன்றாகவே தெரியும்." என்று கூறியிருக்கிறார்.

இருவரும் அமெரிக்கா வாஷிங்டன்னில் பிப்ரவரி 11-ம் தேதி சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க