செய்திகள் :

"ஜாமீன் வேண்டாம்; நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்"- போக்ஸோ வழக்கில் இளைஞர் விடுதலையான பின்னணி என்ன?

post image

சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திக். சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கடந்த 2024- ம்‌ ஆண்டு இவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட மேட்டூர் மகளிர் காவல்துறையினர், கார்த்திக் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தனக்கும் இந்தப் புகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென காவல்துறையினரிடம் திட்டவட்டமாகக் கூறி மறுத்து வந்திருக்கிறார் கார்த்திக்.

ஆனால், ஏற்க மறுத்த காவல்துறையினர், கார்த்திகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஜாமீனில் வெளியே வர விரும்பாத இளைஞர் கார்த்திக், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.

விடுதலையான கார்த்திக்
விடுதலையான கார்த்திக்

இந்த நிலையில், கார்த்திக்கால் கர்ப்பமானதாகச் சொல்லப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, அவருக்கு பிறந்த குழந்தை, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் ஆகிய மூன்று பேரிடமும் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கும் கார்த்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை ஆய்வு முடிவுகளில் நிரூபணமாகியிருக்கிறது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் கார்த்திகை குற்றமற்றவர் என விடுதலை செய்திருக்கிறது.

இது குறித்து தெரிவித்த இளைஞர் கார்த்திக், "இந்தக் குற்றத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லையென எவ்வளவோ சொன்னேன். ஆனால், காவல்துறையினர் கொஞ்சம் கூட கேட்கவில்லை. ஜாமீனில் வெளியே போனால் களங்கம் தீராது என்பதற்காகவே இரண்டு ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தேன். கடையில் நீதி வென்றிருக்கிறது" என்றார்.

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய... மேலும் பார்க்க

வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கட்டட மேஸ்திரியை அடித்து உதைத்த ஊர் மக்கள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 7 வயது சிறுமி, தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிரே உள்ள வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த அரவட்லா மலை ... மேலும் பார்க்க

பாயசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்... மேலும் பார்க்க

சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்... மேலும் பார்க்க

காரில் லேசாக உரசிய பைக்; போலீஸ்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த பைக் கும்பல்; பின்னணி என்ன?

நாக்பூரில் பைக்குகளில் வந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரின் காரை வழிமறித்து, அவரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்... மேலும் பார்க்க

திருவிழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த நடனக் கலைஞர் உயிரிழப்பு; ரசிகர்கள் சோகம்

கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா. இவர் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க